யாழ்குடாவில் மேலதிக போலீசார் குவிப்பு! வன்முறைகளுக்கு விடை கிடைக்குமா?

0
639
northern province director inspector police rashan announce

யாழ்குடா நாட்டில் அதிகரித்துள்ள சமூக சீர்கேடுகள் மற்றும் வன்முறைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த பொலிஸார் மேலதிகமாக அனுப்பட்டுள்ளனர். Other District Extra Police Added Jaffna Special Operation Panel

சமூக சீர்கேடுகளையும் வன்முறைகளையும் கட்டுப்படுத்தும் பொலிஸாரின் நடவடிக்கைக்கு பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்கவேண்டுமென்று வட மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் பாலித பெர்னான்டோ கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ் மாவட்டத்தில் அண்மைக்காலமாக வாள்வெட்டுத் தாக்குதல்கள், பாலியல் பலாத்காரங்கள் மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் துரிதமாக அதிகரித்துள்ளன.

இந்த சம்பவங்களை கட்டுப்படுத்த விடுதலைப் புலிகள் மீள உருவாக்கப்பட வேண்டும் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், கூறியமை பாரிய சர்ச்சையை தென்னிலங்கையில் ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடுவோரை கைதுசெய்வதற்கும் வன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும் யாழ் பொலிஸாருடன் இணைந்து செயற்பட மேலதிகமாக 100 பொலிஸார் யாழ் மாவட்டத்திற்கு அனுப்பட்டுள்ளனர்.

வன்முறைகளைக் கட்டுப்படுத்த விசேட வேலைத்திட்டமொன்றை முன்னெடுத்துள்ளதால் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பொலிஸார் வரவழைக்கப்பட்டுள்ளதாக வட மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் பாலித பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.

விசேட வேலைத்திட்டத்தை முன்னெடுக்க வரவழைக்கப்பட்டுள்ள மேலதிக பொலிஸாருக்கான வாகனங்களும் யாழ்ப்பாணத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites