கோட்டையில் இராணுவ முகாம்! எதிர்ப்பு தெரிவிக்கும் கவனயீர்ப்பு போராட்டத்துக்கு அழைப்பு!

0
240
New Military Base Jaffna Fort People Protest Organized

தொல்பொருள் திணைக்களத்திற்குச் சொந்தமான கோட்டைக் காணியை இராணுவத்திற்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அங்கு இராணுவ முகாம் அமைக்கப்படக் கூடாதென வஙியுறுத்தியும் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமொன்று நடைபெறவுள்ளது. New Military Base Jaffna Fort People Protest Organized

இந்த போராட்டம் நாளை மறுதினம் ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் 2 மணிக்கு கோட்டையின் தெற்குவாசல் பக்கமாக நடைபெறவுள்ளது.

இதேவேளை இராணும் முகாம் அமைப்பதை நிறுத்த வேண்டுமென வலியுறித்தி நடைபெறுகின்ற இப் போராட்டத்திற்கு சகலரையும் கலந்து கொள்ளுமாறும் ஏற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொல்பொருளியல் விதிகளை மீறுவதாகவும் வடக்கில் நிரந்தரமான இராணுவ பிரசன்னத்தை நிலைநிறுத்துவதாகவும் அமைந்துள்ள இந்த திட்டத்துக்கு பலரும் தமது எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites