”பயங்கரவாத ஊக்குவிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்” : நாமல் கருத்து

0
380
Namal Rajapaksa twitter post news Tamil

(Namal Rajapaksa twitter post news Tamil)

விஜயகலாக மகேஸ்வரனின் இராஜினாமாவுடன் அரசாங்கம் நின்றுவிடக் கூடாது, பயங்கரவாத ஊக்குவிப்புக்கு எதிராக நடவடிக்கைகளை தொடர்ந்தும் மேற்கொள்ளவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் இந்த கருத்தை பதிவிட்டுள்ளார்.

அத்துடன் தனது டுவிட்டர் தளத்தில் மேலும் கருத்து பதிவுசெய்த நாமல் ராஜபக்ஷ,

அரசாங்கம் பயங்கரவாத ஊக்குவிப்புக்கு எதிராக செயற்படும் அதேநேரத்தில் இவ்வாறான கருத்துகள் ஏன் வெளியாகுகின்றது என்பது தொடர்பிலும் அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும்.

வடக்கில் வாழும் மக்களுக்கான அத்தியாவசிய தேவைகளை அரசாங்கம் நிறைவேற்றாததன் வெளிப்பாடே இவ்வாறான கருத்துகள் வெளியாகுவதற்கு முக்கிய காரணமாகும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போது, யாழ்ப்பாணம் சுழிபுரத்தில் பாடசாலை சிறுமி ரெஜினா கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் விஜயகலா மகேஸ்வரன் பிரபாகரன் மீண்டும் உருவாக வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

இந்த கருத்து தொடர்பில் பல்வேறு சர்ச்சைகள் நாடுமுழுவதும் ஏற்பட்டிருந்தது. தொடர்ந்து விமர்சனங்களுக்கு முகங்கொடுத்த விஜயகலா மகேஷ்வரன், நேற்றைய தினம் தனது சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்து விலகுவதாக, இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கையளித்தார்.

இந்த விடயம் தொடர்பாகவே நாம் ராஜபக்ஷ இந்த கருத்தினை பதிவட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Namal Rajapaksa twitter post news Tamil, Namal Rajapaksa twitter post news Tamil, Namal Rajapaksa twitter post news Tamil