போக்குவரத்து விதிகளை மீறிய கேரள ஆளுநருக்கு அபராதம்

0
375
Kerala police imposed governors violation traffic rules Governor

Kerala police imposed governors violation traffic rules Governor

போக்குவரத்து விதிகளை மீறி காரில் அதிவேகமாக சென்ற கேரள ஆளுநரின் காருக்கு கேரள போலீசார் அபராதம் விதித்துள்ளனர். அதனை ஏற்ற ஆளுநர் ரூ.400 அபராதம் செலுத்தினார்.

தமிழகத்தைச் சேர்ந்த சதாசிவம்தான் தற்போது கேரள ஆளுநராக பதவிவகிக்கிறார். இவர் இதற்கு முன்பாக உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பணியாற்றி வந்தார். கடந்த மாதம் ஏப்ரல் 7-ம் தேதி ஆளுநர் சதாசிவம் பயன்படுத்தும் மெர்சடீஸ் பென்ஸ் காருக்கு டீசல் நிரப்புவதற்காக எடுத்துச் சென்றனர்.

அப்போது, வெள்ளியம்பலம்-கவுதியார் பகுதிச் சாலையில் நிர்ணயிக்கப்பட்ட வேகத்தைக் காட்டிலும் ஆளுநரின் அதிகாரப்பூர்வ கார் அதிவேகமாகச் சென்றதை சாலையில் பொருத்தப்பட்டிருந்த வேக்கண்காணிப்பு கேமிராவில் பதிவாகியுள்ளது.

இதனால், போக்குவரத்துப் போலீஸார் ஆளுநர் சதாசிவம் சென்ற கார் போக்குவரத்துவிதிகளை மீறியதாகக்கூறி ரூ.400 அபராதம் விதித்தனர். அதற்குரிய ரசீதையும் ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதுகுறித்து ஆளுநர் சதாசிவமிடம் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆளுநர், அந்த காரில் தான் செல்லவிட்டாலும்கூட, தான் பயன்படுத்தும் கார் விதிமுறைகளை மீறி, அதிகவேகமாகச் சென்றது தவறு என்று கூறியுள்ளார்.

மேலும், விதிமுறைகளை மீறுவோர் தண்டிக்கப்பட வேண்டும். அதற்கு நாம் உதாரணமாக இருக்கவேண்டும், போக்குவரத்து போலீஸார் விதித்த 400 ரூபாய் அபாரதத்தொகையை செலுத்தவும் ஆளுநர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி அபராத பணத்தை செலுத்தியதாகவும் ஆளுநர் மாளிகை செய்திகள் தெரிவிக்கின்றன.

Kerala police imposed governors violation traffic rules Governor

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :