பிரபாகரனின் உருவப்படம் எரிப்பு : இனவாதத்தை கக்கும் அரசியல்வாதிகள்

0
675
biyagama pradeshiya sabha members Opposition vijayakala

வடக்கு மற்றும் கிழக்கில் அனைவரும் நிம்மதியாக வாழ, தமிழீழ விடுதலைப் புலிகளின் கை மீண்டும் ஓங்க வேண்டும் என்று அமைச்சர் விஜயகலா தெரிவித்த கருத்து தற்போது தெற்கு அரசியலையே ஆட்டம் காண வைத்துள்ளது.(biyagama pradeshiya sabha members Opposition vijayakala)

விஜயகலாவின் கருத்தை வைத்து அரசியல் இலாபம் தேடும் இனவாத அரசியல் வாதிகள், தமிழர்களுக்கு எதிரான இனவாத செயற்பாடுகளை நாட்டில் ஆங்காங்கு முன்னெடுத்து கொண்டிருக்கின்றனர்.

விஜயகலா உடனடியாக பதவி விலக வேண்டும் என்பதோடு அவருடைய பாராளுமன்ற உறுப்புரிமையும் பறிக்கப்பட வேண்டும் என கொக்கரிக்கும் நபர்களுக்கு தான் அஞ்சப் போவதில்லை என தெரிவித்துள்ள விஜயகலா, தான் செய்தது தவறு எனவும் தனது மக்களின் நன்மை கருதியே அமைச்சு பதவியை இராஜினாமா செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தெற்கில் உள்ள சில அரசியல்வாதிகள் தொடர்ந்து இந்த விடயத்தை தூக்கிப்பிடித்து கொண்டிருக்கின்றனர்.

மேலும் கம்பஹா, பியகம பிரதேச சபையில் விஜயகலா தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் உருப்படத்தையும், புலிக்கொடியையும் எரித்து தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

(வல் கொட்டியா) பிரபாகரனும், விஜயகலாவும் நாட்டிற்கு தேவையில்லை எனவும் கோசம் எழுப்பியுள்ளனர்.

மக்கள் பிரதிநிதிகளின் இவ்வாறான செயற்பாடுகள் மீண்டும் மீண்டும் இனவாதத்தை தூண்டும் வகையில் அமைந்துள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags:biyagama pradeshiya sabha members Opposition vijayakala,biyagama pradeshiya sabha members Opposition vijayakala,biyagama pradeshiya sabha members Opposition vijayakala,