சுவீடன் நாட்டிலிருந்து வெளிவரும் XC40 S.U.V மாடல்..!

0
710
volvo xc40 launched india

(volvo xc40 launched india)
மிக சிறந்த பாதுகாப்பு கார்களை தயாரிப்பதில் முன்னணி வகிக்கும் சுவிடன் நாட்டின் வால்வோ நிறுவனத்தின் , 2018 வால்வோ XC40 S.U.V ஒற்றை R-Design வேரியன்டில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.

தோர் சுத்தியல் வடிவ LED முகப்பு விளக்கினை கொண்டு விளங்குகின்ற இந்த காரில் 2.0 லிட்டர் 4 சிலிண்ட்ர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு 190hp பவர் மற்றும் 400Nm டார்கினை வழங்குகின்றது. ஆற்றலை நான்கு சக்கரங்களுக்கு கொண்டு செல்ல 8 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பெற்றதாக விளங்குகின்றது.

R-Design வேரியன்ட் 18 அங்குல அலாய் வீல் , வயர்லெஸ் மொபைல் போன் சார்ஜர், 13 ஸ்பிக்கர்களை பெற்ற ஹார்மன் கார்டன் சிஸ்டம், பனரோமிக் SUN Roof மற்றும் விரிச்சுவல் கிளஸ்ட்டர் போன்றவற்றுடன் பாதுகாப்பு சார்ந்த அம்சங்களில் லேன் கீப்பிங் அசிஸ்ட், பிளைன்ட் ஸ்பாட் வார்னிங், அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல், ESP, டிராக்‌ஷன் கன்ட்ரோல், மற்றும் 8 காற்றுப்பைகளை கொண்டு விளங்குகின்றது.

volvo xc40 launched india

Tamil News