மஹிந்தவுக்கு எதிரான வழக்கு ஒக்டோபரில் இடம்பெறும்

0
136
tamilnews mahinda president election ctb payment arias

(tamilnews mahinda president election ctb payment arias)

இலங்கை போக்குவரத்துச் சபைக்கு செலுத்த வேண்டிய 140 மில்லியன் ரூபா நட்டத்தை மீளப் பெற்றுத் தருமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் பிரதிவாதி தரப்பு பதில் வழங்குவதற்கு கொழும்பு வணிக மேல் நீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது.

குறித்த வழக்கு தொடர்பாக பதில் வழங்குவதற்கு அவகாசம் வழங்குமாறு பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் நீதிமன்றத்திடம் விடுத்த வேண்டுகோளின் படி நீதிமன்றம் அறிவித்தலை விடுத்துள்ளது.

அதன்படி எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி வழக்கை மீண்டும் விசாரிப்பதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதற்கு முன்னர் எழுத்துமூலம் பதில் வழங்குமாறு பிரதிவாதிகள் தரப்புக்கு நீதிமன்றம் அறிவித்தது.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் பணிகளுக்காக இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ்களை பயன்படுத்தியதன் மூலம் ஏற்பட்ட நட்டத்தை மீளப் பெற்றுக் கொள்வதற்காக இலங்கை போக்குவரத்துச் சபையால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பஸ்களை தேர்தல் பணிகளுக்காக பயன்படுத்தியதன் மூலம் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு 140 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக மனுதாரர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(tamilnews mahinda president election ctb payment arias)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites