பெண்ணை தடவிவிட்டு பஸ்ஸில் இருந்து பாய்ந்த நபர் வைத்தியசாலையில்; கொழும்பில் சம்பவம்

0
290
Sexual harassment bus

இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்த பஸ் வண்டியில் பயணித்த இளம்பெண் ஒருவரின் உடம்பை பஸ்ஸில் பயணித்த நபர் ஒருவர் வருடியுள்ளார். (Sexual harassment bus man admitted hospital)

இதன்போது, குறித்த பெண் பயத்தில் கூச்சலிடவே இந்த நபர் பயந்து பயணித்துக் கொண்டிருந்த பஸ் வண்டியில் இருந்து பாய்ந்து தப்பியோட முயற்சித்துள்ளார்.

இதன்போது, கீழே விழுந்ததனால் காயமுற்ற நிலையில், தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொள்ளுப்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புறக்கோட்டையிலில் இருந்து மதுகமை வரை ஓடிக்கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து பஸ் வண்டியில் பயணித்த நபர், குறித்த இளம் பெண்ணின் அருகில் அமர்ந்து அவளின் உடம்பை தொட்டுள்ளார்.

குறித்த நபரின் இம்சை தாங்கமுடியாது இந்தப் பெண் கூச்சலிட்டுள்ளார். இதனையடுத்து, சந்தேக நபர் பயணிகள் தன்னை தாக்குவார்கள் என பயந்து பஸ் வண்டியின் பின் கதவு வழியாக பாய்ந்து தப்பியோட முயற்சித்துள்ளார்.

இதன்போது கிழே விழுந்துள்ளார். மக்கள் இவரை பிடித்து கொள்ளுப்பிடிய பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

சந்தேக நபர் 37 வயதான இரண்டு பிள்ளைகளின் தகப்பன் எனவும் வெல்லம்பிடிய பிரதேசத்தில் வசிப்பவர் எனவும் தெரியவந்துள்ளது.

பாலியல் துஷ்பிரயோகம் என்ற குற்றச்சாட்டின் பேரில் நீதிமன்றத்தில் ஒப்படைக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Sexual harassment bus man admitted hospital