திருமணத்துக்குப் பின் சினிமாவை விட்டு விலக வேண்டிய அவசியம் இல்லை : சமந்தா பேட்டி..!

0
29
Samantha husband family lucky went daughterinlaw,Samantha husband family lucky went,Samantha husband family lucky,Samantha husband family,Samantha husband

திருமணத்துக்கு பிறகும்  நடிகை சமந்தா பிஸியாக நடித்து வருகிறார். அந்தவகையில், சமீபத்தில் அவர் நடிப்பில் வந்த ”நடிகையர் திலகம்”, ”இரும்புத்திரை”, தெலுங்கில் ”ரங்கஸ்தலம்” ஆகிய படங்கள் வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் இருக்கிறார்.(Samantha husband family lucky went daughterinlaw)

இந்நிலையில் அவர் பேட்டி கூறியதாவது.. :-

”வித்தியாசமான கதாபாத்திரங்களை நான் விரும்புகிறேன். அதிர்ஷ்டவசமாக நான் நினைத்த மாதிரியே அவை கிடைக்கின்றன. சினிமாவுக்கு வந்ததில் இருந்து இப்போதுவரை கடவுள் என் பக்கமே இருக்கிறார்.

எனக்கு தேவையான எல்லாவற்றையும் கொடுத்து இருக்கிறார். திருமணம் ஆனதும் நான் நடிப்புக்கு முழுக்கு போட்டு விடுவேன் என்று நினைத்தனர். ஆனால், திருமணத்துக்குப் பிறகு சினிமாவில் இருந்து விலக வேண்டிய அவசியம் இல்லை.

சினிமாவை பற்றி புரிந்த குடும்பத்துக்கு மருமகளாக சென்றது எனது அதிர்ஷ்டம். அவர்களோ, இனிமேல் நடிக்க வேண்டாம் சினிமாவை விட்டு விலகிவிடு என்று அவர்கள் சொன்னதும் இல்லை. நடிக்க தடைபோட்டதும் இல்லை.

திருமணத்துக்கு பிறகு வாய்ப்புகள் குறையும் என்பார்கள். ஆனால் எனக்கு அதிக வாய்ப்புகள் வருகின்றன. கவர்ச்சிக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்தால் நிலைக்க முடியாது. அதனால்தான் நான் நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் கதாபாத்திரங்களை தேர்வு செய்கிறேன்.

மேலும், சினிமா துறை மீது சமீபத்தில் நடந்த சில சர்ச்சைக்குரிய சம்பவங்கள் மோசமான இமேஜை ஏற்படுத்தி விட்டதாக பேசுகின்றனர். ஆனால் நல்லது, கெட்டது எல்லா துறையிலும் இருக்கிறது. ஒரு சிலர் செய்த தவறால் ஒட்டுமொத்த சினிமா துறையையும் தவறாக பேசக்கூடாது.

அத்துடன், சினிமா நல்ல துறை. என்னை பொறுத்தவரை சாகிற வரைக்கும் சினிமாவில் இருக்க ஆசைப்படுகிறேன். ஒரு குடும்பத்தில் ஒருத்தர் குடிகாரராக இருந்தால் குடும்பத்தில் உள்ள எல்லோரையும் கெட்டவர்கள் என்று சொல்ல முடியுமா? சினிமா துறையும் அப்படித்தான். நிறைய நல்ல விஷயங்கள் சினிமா துறையில் இருக்கிறது.”

என சமந்தா கூறியுள்ளார்.

<MOST RELATED CINEMA NEWS>>

சூர்யாவுடன் இணையும் ஆர்யா : கே.வி.ஆனந்த்தின் புதிய பட அப்டேட்..!

ஆயிரம் அடிக்கு மேல் பறந்தவாறு பேஸ் பால் விளையாட்டை பார்த்து ரசித்த திரிஷா..!

மீண்டும் தயாராகும் சிம்புவின் மன்மதன் அம்பு..!

யாஷிகாவை கட்டிப்பிடித்து ரொமான்ஸ் பண்ணும் மகத் : காறித்துப்பிய பாலாஜி..!

ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிக்க ஆசை : மனம் திறந்த மஞ்சிமா மோகன்..!

அந்த மாதிரி காட்சிகளில் நடிக்கவே மாட்டேன் : கீர்த்தி சுரேஷ் உறுதி..!

இரண்டாவது திருமண பந்தத்தில் இணையும் டைரக்டர் விஜய்..!

காதலருக்காக தன்னை தாழ்த்தும் அளவுக்கு இறங்கி வந்த சர்ச்சை நடிகை..!

துருவ் விக்ரம் ஜோடியான பெங்கால் நடிகை : விரைவில் உத்தியோக பூர்வ அறிவிப்பு..!

Tags :-Samantha husband family lucky went daughterinlaw

Our Other Sites News :-

மஹிந்தவுக்கு எதிரான வழக்கு ஒக்டோபரில் இடம்பெறும்