விஜயகலாவுக்கு ஆதரவுக்குரல் எழுப்பியுள்ள வடக்கு முதல்வர்!

0
504
North Chief Minister wigneswaran Supports Vijayakala Maheswaran

இலங்கை அரசாங்கத்தின் சிறுவர் மற்றும் மகளீர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்க எதிராக தென்னிலங்கையில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில் அவருக்கு ஆதரவாக வட மாகாண முதலமைச்சர் குரல்கொடுத்திருக்கின்றார். North Chief Minister wigneswaran Supports Vijayakala Maheswaran

விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில் தமிழ் மக்கள் போரினால் ஏற்பட்ட பாதிப்புக்களை தவிர, பாதுகாப்பாகவே இருந்தார்கள் என்பது உலகறிந்த உண்மை என்று கூறியுள்ள வட மாகாண முதலமைச்சர், அதனால் இந்த உண்மையை கூறிய விஜயகலா மகேஷ்வரனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதையோ அல்லது அவரது அமைச்சுப் பதவியை பறிப்பதோ நியாயமாக முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்கள் நிம்மதியாகவும், பாதுகாப்பாகவும் வாழ வேண்டும் என்றால் தமிழீழ விடுதலைப் புலிகள் மீள உருவாக்கப்பட வேண்டும் என்று சிறிலங்கா அரசாங்கத்தின் சிறுவர் மற்றும் மகளீர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் யூலை 2 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நடமாடும் சேவையின் போது தெரிவித்திருந்தார்.

இந்த உரை ஊடகங்களில் வெளியானதை அடுத்து தென்னிலங்கையிலுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான தரப்பினர் மாத்திரமன்றி தேசிய அரசாங்கத்தின் பிரதான பங்காளிக் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியினரும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியினரும் கடும் எதிர்ப்பை வெளியிட்டுவரும் அதேவேளை விஜயகலா மகேஸ்வரனின் அமைச்சுப் பதவியை பறிக்க வேண்டும் என்றும் கூறி வருகின்றனர்.

இது தொடர்பில் முதலமைச்சர் கூறியுள்ளதாவது:

முன்பு எமது மக்கள் பாதுகாப்பாக வாழ்ந்து வந்தார்கள் என்பது உண்மை. போர்க்காலத்தில் ஒரு பெண் தனிமையில் நகை நட்டு அணிந்து கொண்டு இருள் வந்த பின்னர் வீடு நோக்கி நடந்து சென்றால் அவருக்கு எந்தத் தொந்தரவோ பாதிப்போ ஏற்படாதிருந்தது என்பது உலகறிந்த உண்மை. இன்று அப்படியா? வாள்வெட்டு, வன்புணர்ச்சி, வன்செயல்கள், போதைப்பொருள் பாவனைகள் அதிகரித்து வருகின்றன.

இலஞ்ச ஊழல்கள் மலிந்து காணப்படுகின்றன. அதனால்தான் நான் இராணுவத்தைத் திரும்ப அழையுங்கள்; பொலிஸ் அதிகாரங்களை எமக்குத் தாருங்கள். சகல வன்முறைகளையும் நிறுத்திக் காட்டுகின்றோம் என்று கூறியுள்ளேன். நிலைமையைப் புரிந்து கொள்ளாமல் தெற்கில் உள்ளவர்கள் தமது உள்ளார்ந்த வெறுப்புக்களைப் பிரதிபலிப்பது வருத்தத்திற்கு உரியது என கூறியுள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites