மாத்தறையில் திருமணம் நடைபெற்று இரண்டே நாட்களில் கணவன் பலி!

0
479

மாத்தறை, வெலிகம ஹேன்வல பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வெலிகம பொலிஸார் தெரிவித்தார். Matara Boy Accident

மோட்டார் சைக்கிளொன்றும் மற்றும் பஸ்ஸொன்றும் நேருக்கு நேர் மோதியமையாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

வெலிகம, கப்பரதொட்டை பிரதேசத்தைச் சேர்ந்த திலும் குமார என்ற 19 வயது இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து இடம்பெறுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் திருமணபந்தத்தில் இணைந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் சென்ற மேலுமொரு நபர் விபத்தில் உயிரிழந்துள்ளார். அவர் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.