யாழில். இன்றும் நாளையும் மின்தடை

0
287

யாழ். மாவட்டத்தின் சில பகுதிகளில் இன்றும் நாளை வெள்ளிக்கிழமையும் மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார். (Electricity bans Today, tomorrow Jaffna)

மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக இன்று காலை 08.30 மணி தொடக்கம் மாலை 05 மணி வரையும் மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். மாவட்டத்தின் அறுகுவெளி, தனங்கிளப்பு, நாவற்குழி, கேரதீவு வீதி, தச்சன்தோப்பு, கோகிலாக்கண்டி, மறவன்புலவு ஆகிய பகுதிகளிலும் இன்று மின்சாரம் தடைப்படுத்தப்பட்டுள்ளது.

நாளை வெள்ளிக்கிழமை காலை 08.30 மணி முதல் மாலை 05 மணி வரை யாழ். மாவட்டத்தின் காரைநகர் சிவகாமி அம்மன் கோவிலடியிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Electricity bans Today, tomorrow Jaffna