அர்ஜுன் அலோசியஸ் மீதான மீள்பரிசீலனை மனு 18ம் திகதி வரை ஒத்திவைப்பு

0
383
Arjun Aloysius owner purse turasis executive officer Kasun Palisena

(Arjun Aloysius owner purse turasis executive officer Kasun Palisena)

பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அதன் நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோர் தமக்கு பிணை வழங்குமாறு கோரி தாக்கல் செய்த மீள்பரிசீலனை மனு விசாரணைக்கு அழைக்கப்பட்டது.

மேன்முறையீட்டு நீதிமன்றின் தலைமை நீதிபதி ப்ரீதி பத்மன் சுரசேன மற்றும் நீதிபதி சிரான் குணரத்ன முன்னிலையில் நேற்று குறித்த விசாரணை நடைபெற்றது.

இதன்போது, இந்த மனுவின் மேலதிக விசாரணை நடவடிக்கைகள் எதிர்வரும் 18ம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டது.

சட்டமா அதிபர் சார்பில் ஆஜராகியிருந்த மேலதிக சொலிசிஸ்டர் ஜெனரல் யசந்த கோதாகொடவின் விளக்கமளிக்கும் நடவடிக்கை நிறைவடைந்துள்ள நிலையில் எதிர்வரும் 18 ஆம் திகதி மனுதாரர்கள் சார்பில் விளக்கமளிக்கப்படள்ளது.

இந்த மனு மூலம் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன ஆகியோர், மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி சம்பந்தமாக கைது செய்யப்பட்டுள்ள தம்மை பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் பிணையில் விடுவிப்பதற்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்ற நீதவான் மறுப்புத் தெரிவித்ததாக நீதிமன்றில் குறிப்பிட்டுள்ளனர்.

எனினும், விசாரணைகளின் படி குற்ற விசாரணை பிரிவினர் நீதிமன்றுக்கு சமர்ப்பித்த அறிக்கையில் பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் எந்த தவறும் இனங்காணப்படவில்லை என்று மனுதாரர்கள் தெரிவித்தனர்.

இதன்காரணமாக, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட பிணை மறுப்புத் தீர்ப்பு சட்டத்துக்கு முரணானது என்று தீர்ப்பளித்து தம்மை பிணையில் விடுவிக்க உத்தரவிடுமாறு அர்ஜுன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன மேன்முறையீட்டு நீதிமன்றில் கேட்டுள்ளனர்.

(Arjun Aloysius owner purse turasis executive officer Kasun Palisena)

 

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites