ரவி கருணாநாயக்கவின் மேலுமொரு தில்லு முல்லு அம்பலம்

0
181
Ravi Karunanayake Perputal Treasuries

முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்குச் சொந்தமான நிறுவனமொன்றின் பிரதான நிதி அதிகாரிக்கு டபிள்யூ.எம். மெண்டிஸ் கோ. நிறுவனம் 5 மில்லியன் ரூபா பெறுமதியான காசோலையொன்றை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Ravi Karunanayake Perputal Treasuries

இத்தகவலை சட்டமா அதிபர் திணைக்களம் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளது.

இதேவேளை மெண்டிஸ் நிறுவனத்தால் 2015 ஜனவரி 31 – 2016 செப்டம்பர் 2016 இடையான காலப்பகுதியில் வழங்கப்பட்ட காசோலைகள் நிதிச் சட்டத்துக்கு புறம்பானது என சட்டமா அதிபர் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

பணச்சலவை தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றவியல் குற்றச்சாட்டுக்களின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.