தொல்லை தாங்காமல் கணவனை கொன்ற மனைவி!

0
28
Wife shot husband Paris 16th region

பரிஸ் 16ம் வட்டாரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றிலிருந்து நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த நபரின் மனைவி வெட்டுக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Wife shot husband Paris 16th region

இச்சம்பவம் கடந்த திங்கட்கிழமை நண்பகலில் 16ஆம் வட்டாரத்தில் உள்ள Boulevard Murat அடுக்குமாடி குடியிருப்பில் இடம்பெற்றுள்ளது. காயமடைந்த பெண்ணே காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், வீட்டின் உள்ளே கத்திக்குத்துக்கு இலக்காகி உயிருக்கு போராடும் நிலையில் இருந்த பெண்ணையும், கையில் துப்பாக்கியுடன் உயிரிழந்த நிலையில் அவருடைய கணவரும் இருந்ததனை கண்டு, பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

குடும்ப பிரச்சினை காரணமாக இந்த வன்முறை வெடித்திருக்கலாம் என அறிய முடிகிறது. இது தொடர்பான விசாரணைகளை, பரிஸ் 16 ஆம் வட்டார காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும், உயிரிழந்த நபரின் சடலம் தலையில் துப்பாக்கிக்குண்டு பாய்ந்த நிலையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்