நேற்றைய போட்டியில் விராட் கோஹ்லி படைத்த புதிய சாதனை!!!

0
457
Virat Kohli 2000 runs T20 news Tamil

இங்கிலாந்து அணிக்கெதிரான முதலாவது டி20 போட்டியில் இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லி புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். Virat Kohli 2000 runs T20 news Tamil

இங்கிலாந்து அணிக்கெதிராக நேற்று மென்செஸ்டரில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி, கே.எல். ராஹுலின் சதத்துடன் இலகு 8 விக்கட்டுகள் வித்தியாசத்தி்ல் வெற்றிபெற்றிருந்தது.

இந்த போட்டியில் 20 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட விராட் கோஹ்லி, சர்வதேச டி20 போட்டிகளில் வேகமாக 2000ம் ஓட்டங்களை கடந்த வீரர் என்ற பெருமையை பெற்றுக்கொண்டுள்ளார்.

2000ம் ஓட்டங்களை கடப்பதற்கு 8 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் களமிறங்கிய கோஹ்லி, நேற்றைய போட்டியில் இந்திய அணி 142 ஓட்டங்களை பெற்றிருந்த போது, 2000 ஓட்டங்கள் என்ற மைல்கல்லை அடைந்தார்.

60 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடிய கோஹ்லி வெறும் 56 இன்னிங்ஸ்களில் 2000ம் ஓட்டங்களை கடந்து சாதனைப்படைத்துள்ளார்.

சர்வதேச டி20 போட்டிகளில் ஏற்கனவே நியூஸிலாந்து அணியின் மார்டின் குப்டில், பிரெண்டென் மெக்கலம், பாகிஸ்தானின் சொஹைப் மலிக் ஆகியோர் 2000 ஓட்டங்களை கடந்துள்ளதுடன், நான்காவதாக விராட் கோஹ்லி 2000 ஓட்டங்களை கடந்துள்ளார். எனினும் இந்திய ஆடவர் கிரிக்கெட்டில் இந்த மைல்கல்லை கடந்த முதலாவது வீரர் விராட் கோஹ்லி என்பதுடன், மகளிர் கிரிக்கெட்டில் மிதாலி ராஜ் ஏற்கனவே இந்த மைல்கல்லை அடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Virat Kohli 2000 runs T20 news Tamil,Virat Kohli 2000 runs T20 news Tamil,Virat Kohli 2000 runs T20 news Tamil