அலரிமாளிகையில் அவசர சந்திப்பு : யாழில் இருந்து ஹெலிகொப்டரில் வந்தார் விஜயகலா

0
631
vijayakala maheswaran visits colombo helicopter

சிறுவர் மற்றும் பெண்கள் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் சற்றுமுன்னர் யாழில் இருந்து கொழும்பு நோக்கி ஹெலிகொப்டர் மூலம் வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.(vijayakala maheswaran visits colombo helicopter)

இன்று மாலை 6.30 மணியளவில் அலரி மாளிகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை, விஜயகலா மகேஸ்வரன் சந்திக்கவுள்ளார்.

இதனையடுத்தே விஜயகலா மகேஸ்வரன் கொழும்புக்கு வந்துள்ளார்.

வடக்கு மற்றும் கிழக்கில் அனைவரும் உயிருடன் வாழ, நிம்மதியாக வீதியில் நடக்க, பிள்ளைகள் நிம்மதியாக கல்வி கற்க மற்றும் பாடசாலைக்கு சுதந்திரமாக சென்று வீடுதிரும்ப வேண்டுமெனின் வடக்கு கிழக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கை ஓங்க வேண்டும் என்று அமைச்சர் விஜயகலா நேற்று முன்தினம் யாழில் தெரிவித்திருந்தார்.

இந்த கருத்து தற்போது தெற்கு அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் விஜயகலா மகேஸ்வரன் பாராளுமன்றுக்கு வந்து அவருடைய கருத்து தொடர்பில் விளக்கமளிக்க வேண்டும் எனவும் அவருடைய அமைச்சு பதவி பறிக்க வேண்டும் எனவும் கூட்டு எதிரணியினர் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

img src=”https://www.tamilnews.com/wp-content/uploads/2018/07/gotabaya-rajapaksa-starts-political5.jpg” />

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags:vijayakala maheswaran visits colombo helicopter,vijayakala maheswaran visits colombo helicopter,vijayakala maheswaran visits colombo helicopter,