விஜயகலாவின் பூகம்பம் : பிரதமரின் விசேட உரையால் பாராளுமன்றில் பதற்றம்

0
810
vijayakala maheswaran statement ranil wickremesinghe parliament speech

இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரினின் விடுதலைப் புலிகள் மீண்டும் வரவேண்டு என தெரிவித்த கருத்து தொடர்பில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நாடாளுமன்றத்தில் தற்போது உரையாற்றிக்கொண்டிருக்கின்றார். அவருடைய, உரைக்கு ஒன்றிணைந்த எதிரணியின் எம்.பிகள் சிலர், கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளதால் சபையில் அமளிதுமளி ஏற்பட்டுள்ளது. (vijayakala maheswaran statement ranil wickremesinghe parliament speech)

இதனால் சபையில் சற்று பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டது. எனினும், பிரதமரின் உரைக்கு பின்னர், நாடாளுமன்ற நடவடிக்கைகள் அடுத்த கட்டத்துக்கு நகர்த்தப்பட்டது.

வடக்கு மற்றும் கிழக்கில் அனைவரும் உயிருடன் வாழ, நிம்மதியாக வீதியில் நடக்க, பிள்ளைகள் நிம்மதியாக கல்வி கற்க மற்றும் பாடசாலைக்கு சுதந்திரமாக சென்று வீடுதிரும்ப வேண்டுமெனின் வடக்கு கிழக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கை ஓங்க வேண்டும் என்று அமைச்சர் விஜயகலா தெரிவித்திருந்த சர்ச்சைக்குரிய கருத்து நேற்று பாராளுமன்றில் பூகம்பமாக வெடித்தது.

விஜயகலாவின் சர்சைக்குரிய கருத்தால் நேற்று பாராளுமன்றில் சூடான வாத பிரதிவாதங்கள் இடம்பெற்றதோடு விஜயகலா அரசாங்கத்தில் இருந்து விலக வேண்டும் என ஆளும் மற்றும் எதிர் தரப்பு எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்தனர்.

மேலும் இந்த விடயம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விளக்கமளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

பாராளுமன்றில் இருந்து செங்கோலை எடுத்து செல்ல முயற்சித்தமையால் பாராளுமன்ற நடவடிக்கைகள் இன்று வரை ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உரையாற்றினார்.

“இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் உரைதொடர்பில், அவரிடம் கேட்டறிந்துகொள்வதற்கு, கொழும்புக்கு அழைத்துள்ளேன். அவர், சுகயீனம் காரணமாக, யாழ்ப்பாணத்தில் உள்ளார்.

இன்றையதினம் ​கொழும்புக்கு வருகைதருவதாக உறுதியளித்தார். வந்தவுடன், அவரிடம் கேட்டறிந்துகொண்டு, அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

அரசாங்கமும், ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கியத்தை பாதுக்காக்கும் நடவடிக்கையிலேயே ஈடுபட்டுள்ளது. எல்.ரி.ரி.ஈ, தடைச்செய்யப்பட்ட இயக்கமாகும். அவ்வியக்கத்தை மீண்டும் உருவாக்கவேண்டிய தேவை எமக்கில்லை.

பௌத்தத்துக்கான முன்னுரிமை அவ்வாறே பேணி, சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம்கள் ஏற்றுக்கொள்ளும் அரசியல் தீர்வை பெற்றுகொடுக்கவேண்டும். அத்துடன் அடிப்படை பிரச்சினை, அதிகார பகிர்வு ஆகியன தொடர்பில் தீர்மானம் எடுக்கவேண்டும்.

காணிப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படுகின்றது. வடக்கு மற்றும் கிழக்குக்கான அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

எங்களுடைய அரசியல் குழு, நேற்றிரவு கூறியது, விஜயகலா மகேஸ்வரனின் உரை தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. அந்த விவகாரம் தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

பயங்கரவாத்தை தோற்கடிப்பதற்கு, முப்படையினர் உள்ளிட்ட பொலிஸார், சிவில் பாதுகாப்பு படையினர் மற்றும் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம்கள் என்ற பேதமின்ற, உயிர்கொடுத்தனர். இந்நிலையில், அவ்வியகத்தை மீண்டும் கட்டியெழுப்பவேண்டிய தேவை யாருக்கும் இல்லை.

நாடாளுமன்றத்தின் மீது குண்டுவீசி, நாடாளுமன்ற நடவடிக்கைகள் சீர்குலைப்பதற்கு முயற்சித்தனர். அன்றிருந்த பாதுகாப்பு பிரதியமைச்சர் அனுருத்த ரத்வத்த மற்றும் சபாநாயகர் கே.பீ.இரத்னாயக்கவுடன் தொடர்புகொண்டு, நாடாளுமன்றத்தை கூட்டுமாறு நான் கேட்டிருந்தேன்.

ஜனாதிபதி தேர்தலின் போது, வாக்களிக்கவிடாமல், புலிகளுக்கு பணம் கொடுக்கப்பட்டது. பொலிஸார் 600 பேரை கொன்றொழித்த கருணாவுக்கு, கட்சியின் உப-தலைவர் பதவி வழங்கப்பட்டது. எனினும், புலிகளை தோற்கடித்த, இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை, சிறையிலடைத்தனர்.

இதன்போது, சபையிலிருந்த ஒன்றிணைந்த எதிரணி உறுப்பினர்கள் சிலர், கடுந்தொனியில் கோஷமெழுப்பினர். எனினும், சபை அடுத்தகட்டத்துக்கு நகர்த்தப்பட்டது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags:vijayakala maheswaran statement ranil wickremesinghe parliament speech,vijayakala maheswaran statement ranil wickremesinghe parliament speech,vijayakala maheswaran statement ranil wickremesinghe parliament speech,