ஒரே சொல்லில் தென்பகுதி அரசியலை அலற விட்ட விஜயகலா! கொந்தளிக்கும் கொழும்பு!

0
358
Vijayakala Maheswaran LTTE Speech Raise Issues Colombo Politics

தனது பிழைப்புவாத அரசியலுக்காகவே இராஜாங்க அமைச்சர் விஜயகலா விடுதலைப்புலிகளை உருவாக்குவேன் என்னும் கருத்தை கூறியுள்ளார் . இவர் கூறிய கருத்தை அரசாங்கத்தின் கருத்தாக எடுத்துக்கொள்ள முடியாது” என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார். Vijayakala Maheswaran LTTE Speech Raise Issues Colombo Politics

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார “இராஜாங்க அமைச்சர் விஜயகலாவுக்கு பைத்தியம் பிடித்துள்ளது” என்று மிகவும் கீழ்த்தரமாக கூறியிருந்தார்.

அதேவேளை விடுதலை புலிகள் அமைப்பை உருவாக்குவதே எமது நோக்கம் என சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்த, சிறுவர் அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை மேற்கொள்ளப்படும் என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

மேலும் பயங்கரவாதத்தை தூண்டும் வகையில் கருத்து தெரிவித்திருக்கும் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனை அமைச்சுப் பதவியிலிருந்து நீக்க ஜனாதிபதி செயற்பட வேண்டும் என, ஒன்றி​ணைந்த எதிரணியின் ஏற்பாட்டாளரும், கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பிரசன்ன ரணதங்க தெரிவித்தார்.

அதுமட்டுமன்றி சிறுவர் அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனை கைதுசெய்யுமாறு, பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடொன்று செய்யப்பட்டுள்ளது.

சிங்கள ராவய அமைப்பினால் செய்யப்பட்டள்ள அந்த முறைப்பாட்டில், “ தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், யாழ்ப்பாணத்தில் வைத்து உரையாற்றியுள்ளார். ஆகையால், அவரை கைதுசெய்து, சட்டத்தை நிலைநாட்ட வேண்டும்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites