அமெரிக்காவின் ஈடுபாடு இல்லாதுவிடினும் இலங்கையின் பொறுப்பு கூறல் தீர்மானம் நலிவடையாது!

0
362
UN Sri Lanka Coordinator Clears TNA Leader Sambanthan

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இருந்து அமெரிக்கா விலகியுள்ள நிலையில் இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பிலான பொறுப்பு கூறலில் உண்டாக கூடிய மாற்றங்கள் தொடர்பில் சிறிலங்காவுக்கான ஐ.நாவின் புதிய வதிவிடப் பிரதிநிதி ரெரன்ஸ் டி ஜோன்ஸ் , எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவருமான சம்பந்தனுக்கு தெளிவுபடுத்தியுள்ளார். UN Sri Lanka Coordinator Clears TNA Leader Sambanthan

நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் சந்தித்துப் பேச்சு நடத்திய போது சிறிலங்காவுக்கான ஐ.நாவின் புதிய வதிவிடப் பிரதிநிதி ரெரன்ஸ் டி ஜோன்ஸ் கூறிய கருத்தின் படி,

“ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இருந்து அமெரிக்கா விலகினாலும், சிறிலங்காவின் மனித உரிமை விவகாரங்கள் தொடர்பான அனைத்துலக ஈடுபாடு மாற்றமடையாது.

2015 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அமுலாக்கம் தொடர்பாக, சிறிலங்கா அரசாங்கத்தின் மீதான அனைத்துலக ஈடுபாடு தொடர்ந்தும் மாற்றமடையாமல் இருக்கும்” என்று தெரிவித்தார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இருந்து அமெரிக்கா விலகியுள்ள சூழல் குறித்து, இந்தச் சந்திப்பின் போது ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :