இங்கிலாந்துக்கு எதிராக சமநிலை 1-1! கொலம்பியாவின் மினா அபார ஆட்டம்

0
151
tamilnews england meet colombia knock match fifa world cup

(tamilnews england meet colombia knock match fifa world cup)

21 வது ஃபிபா உலகக் கோப்பையின் கடைசி நாக் அவுட் ஆட்டத்தில் இங்கிலாந்து 1-0 என முன்னிலையில் இருந்த நிலையில், கடைசி நேரத்தில் மினா கோலடிக்க 1-1 என கொலம்பியா சமநிலையை உருவாக்கியது.

ரஷ்யா, உருகுவே, ஸ்பெயின், போர்ச்சுகல், பிரான்ஸ், டென்மார்க், குரேஷியா, அர்ஜென்டினா, பிரேசில், சுவிட்சர்லாந்து, ஸ்வீடன், மெக்சிகோ, பெல்ஜியம், இங்கிலாந்து, கொலம்பியா, ஜப்பான் ஆகியவை நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியிருந்தன.

நாக் அவுட் சுற்று ஆட்டங்கள் நடந்து வருகின்றன.

அர்ஜென்டினாவை 4-3 என வென்று பிரான்ஸ் காலிறுதிக்கு முன்னேறியது. போர்ச்சுகலை 2-1 என வென்று உருகுவே முன்னேறியது.

நேற்று முன்தினம் நடந்த ஆட்டத்தில் பெனால்டி ஷூட்டில் 4-3 என ஸ்பெயினை வென்று காலிறுதி நுழைந்தது ரஷ்யா.

மற்றொரு ஆட்டத்தில் குரேஷியா 3-2 என பெனால்டி ஷூட்டில் டென்மார்க்கை வென்று காலிறுதிக்கு முன்னேறியது.

நேற்று நடந்த ஆட்டத்தில் பிரேசில் 2-0 என மெக்சிகோவை வென்றது. பரபரப்பான ஆட்டத்தில் பெல்ஜியம் 3-2 என ஜப்பானை கடைசி விநாடியில் வென்று காலிறுதி நுழைந்தது.

இந்த உலகக் கோப்பையில் இந்த உலகக் கோப்பையில் ஜி பிரிவில் இடம்பெற்றிருந்த இங்கிலாந்து 3ல் 2 வெற்றி, ஒரு தோல்வியைப் பெற்றது.

துனீஷியாவை 2-1, பனாமாவை 6-1 என்று வென்ற இங்கிலாந்து, கடைசி ஆட்டத்தில் பெல்ஜியத்திடம் 1-0 என தோல்வியடைந்தது. எச் பிரிவில் இடம்பெற்றிருந்த கொலம்பியா 3ல் 2ல் வெற்றி, ஒரு தோல்வி அடைந்தது. ஜப்பானிடம் 2-1 என்று தோல்வியடைந்தது.

அதன்பிறகு போலந்தை 3-0, செனகலை 1-0 என வென்றது. இங்கிலாந்தின் சாதனை 1966 ல் உலகக் கோப்பையை வென்றுள்ள இங்கிலாந்து, இதுவரை நடந்துள்ள உலகக் கோப்பைகளில் நாக் அவுட் சுற்றுகளில் மிகவும் வலுவான ஐந்து அணிகளிடம் மட்டுமே தோல்வியடைந்துள்ளது.

ஜெர்மனியிடம் 1970, 1990, 2010, போர்ச்சுகல்லிடம் 2006, பிரேசிலிடம் 1962, 2002, அர்ஜென்டினாவிடம் 1986, 1998, உருகுவேயிடம் 1954ல் தோல்வியடைந்துள்ளது.

மற்ற அணிகளிடம் தோல்வியடைந்ததில்லை. கலக்குமா கொலம்பியா கடந்த உலகக் கோப்பையில் கால் இறுதிக்கு நுழைந்ததோ கொலம்பியாவின் அதிகபட்ச வெற்றியாகும்.

இந்த உலகக் கோப்பையில் இரண்டு ஆட்டங்களில் 5 கோல்களை அடித்து அசத்தியுள்ளார் இங்கிலாந்தின் ஹாரி கேன். அவரை கட்டுப்படுத்தி, தோல்வியில் இங்கிலாந்தின் சாதனையை மாற்றி அமைக்குமா கொலம்பியா.

தகவல் மூலம் – tamilmykhel

(tamilnews england meet colombia knock match fifa world cup)

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :