போர்க்குற்ற விசாரணை முன்னெடுக்கப்படவேண்டும்! எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் வலியுறுத்தல்!

0
406
Sri Lanka Opposition Leader Sambanthan Enforces War Crime Inquiries

சிறிலங்காவுக்காக ஐ.நாவின் புதிய வதிவிடப் பிரதிநிதி ரெரன்ஸ் டி ஜோன்ஸ், எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனை, நாடாளுமன்றத்தில் உள்ள, அவரது செயலகத்தில் சந்தித்துப் பேச்சு நடத்தினார். Sri Lanka Opposition Leader Sambanthan Enforces War Crime Inquiries

நேற்று இடம்பெற்ற இந்த சந்திப்பில் , பாரிய குற்றங்களை இழைத்த சிறிலங்கா இராணுவத்தினர் தண்டிக்கப்பட வேண்டும் என்று, ஐ.நாவுக்கான சிறிலங்காவின் வதிவிடப் பிரதிநிதி ரெரன்ஸ் டி ஜோன்சிடம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.

இதன்போது, கருத்து வெளியிட்ட இரா.சம்பந்தன்,

“ ஐ.நா மனித உரிமைகள் பேரவையினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், குறிப்பிடப்பட்டிருந்த அநேகமான விடயங்கள் குறித்த ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

சிறிலங்கா அரசாங்கம், இந்தத் தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கியது மட்டுமல்லாது, இதனை நிறைவேற்றுவதற்கு மேலதிக காலஅவகாசத்தையும் கோரியிருந்தது.

அந்தக் கோரிக்கையை அனைத்துலக சமூகம் ஏற்று அனுமதித்தும் இருந்தது. ஆகவே சிறிலங்கா அரசாங்கம், தமது வாக்குறுதிகளிலிருந்து பின்வாங்க முடியாது.

கடந்தகால சம்பவங்கள் மீளநிகழாமையை உறுதி செய்வதற்கு, ஒரு புதிய அரசியலமைப்பு, அங்கீகரிக்கப்படுவது அவசியம். ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தில், உள்ள அம்சங்களில் இதுவும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

புதிய அரசியலமைப்பு தொடர்பில் 1988 ஆம் ஆண்டிலிருந்தே பல்வேறு கருமங்கள் இடம்பெற்று வந்துள்ளன. தற்போது இதனை முன்னெடுத்து செல்வதற்கு அரசியல் விருப்பும் தைரியமுமே தேவைப்பாடாக உள்ளது” என கூறினார்.

மேலும் சுமார் ஒரு மணி நேரம் நீடித்த இந்தச் சந்திப்பில் இரா.சம்பந்தனுடன் இணைந்து பங்கேற்ற கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், கருத்து வெளியிடுகையில், “காணிகள் விடுவிப்பு தொடர்பாக முடிவுகள் எடுப்பதனை தனியே ஆயுதப்படையினரிடம் கையளிக்காமல், சிறிலங்கா அரசாங்கம் முடிவுகளை எடுத்து அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :