விக்ரம் ஜோடி திரிஷா இல்லை… இவர் தானாம் : சாமி 2 பட லேட்டஸ்ட் அப்டேட்..!

0
259
Saamy2 Tamil movie latest update,Saamy2 Tamil movie latest,Saamy2 Tamil movie,Saamy2 Tamil,Saamy2

கடந்த 2003 ஆம் ஆண்டு ஹரி இயக்கத்தில், விக்ரம் – திரிஷா ஜோடியாக நடித்து வெளியாகி வெற்றிகரமாக ஓடிய படம் ”சாமி”. இப் படத்தின் இரண்டாம் பாகம் இப்போது தயாராகி வருகிறது.(Saamy2 Tamil movie latest update)

”சாமி 2” படத்தில், விக்ரம் ஜோடியாக கீர்த்தி சுரேசை தேர்வு செய்தனர். திரிஷாவையும் முக்கிய கதாபாத்திரத்தில் ஒப்பந்தம் செய்தனர்.

ஆனால், படப்பிடிப்பு தொடங்கியதும் திரிஷா திடீரென்று படத்தில் நடிக்க மறுத்து விலகினார். தனது கதாபாத்திரம் வலுவில்லாமல் உள்ளது என்றும் சிறிது நேரமே தனது காட்சிகளை படத்தில் வைத்துள்ளனர் என்றும் அவர் குறை கூறியதாக தெரிகிறது. இதனாலேயே அதில் நடிக்க மறுத்ததாக கூறப்பட்டது.

அதுமட்டுமல்லாமல், திரிஷா மீது ”சாமி-2” படத்தை தயாரிக்கும் சிபு தமீம் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்தார். அத்துடன் சமரச முயற்சிகளை திரிஷா ஏற்காமல் நடிக்க முடியாது என்பதில் பிடிவாதமாக இருந்தார். சம்பள அட்வான்சையும் திருப்பி கொடுத்து விட்டார்.

இதனால் படக்குழுவினர் வேறுவழியின்றி இப்போது திரிஷாவுக்கு பதில் ஐஸ்வர்யா ராஜேசை ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்த படத்தில் ரமேஷ் கண்ணா, கோட்டா சீனிவாசராவ், டெல்லி கணேஷ், சுமித்ரா ஆகியோரும் நடிக்கின்றனர்.

இந்நிலையில், ”சாமி-2” படப்பிடிப்பு 90 சதவீதம் முடிந்துள்ளது. ஐஸ்வர்யா ராஜேஷ் சம்பந்தமான காட்சிகளும் பாடல் காட்சியும் படமாகி வருகிறது.

இந்த படம் குறித்து இயக்குனர் ஹரி கூறும்போது.. :-

“சாமி படம் முதல் பாகத்தின் இறுதி காட்சியில் ’சாமி வேட்டை தொடரும்’ என்று முடித்து இருந்தோம். அந்த வகையில், முதல் பாகத்தின் வேட்டை இரண்டாம் பாகத்தில் தொடர்கிறது” என்றார்.

மேலும் இப்படம் குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் கூறும்போது.. :-

“திரிஷா மறுத்ததால் அவரது கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன். மணிரத்னம், வெற்றிமாறன், கவுதம் மேனன் இயக்கத்தில் நடித்து விட்டேன்.

ஹரி திரைக்கதையை விறுவிறுப்பாக நகர்த்துவார். அவர் இயக்கத்தில் விக்ரமுடன் நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. எனது கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளனர்” எனக் கூறினார்.

<MOST RELATED CINEMA NEWS>>

நடிகையை கர்ப்பமாக்கி ஏமாற்றிய பிரபல பாலிவுட் நடிகரின் மகன் : பரபரப்புத் தகவல்..!

என்னமோ நடக்குது பட இயக்குநருடன் கை கோர்க்கும் அரவிந்த்சாமி..!

மீண்டும் தயாராகும் சிம்புவின் மன்மதன் அம்பு..!

உடல் உறுப்புக்கள் திருட்டுக்காக நடிகை கடத்தல்..!

ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிக்க ஆசை : மனம் திறந்த மஞ்சிமா மோகன்..!

அந்த மாதிரி காட்சிகளில் நடிக்கவே மாட்டேன் : கீர்த்தி சுரேஷ் உறுதி..!

ஷாரிக்கிற்கு வெளியே இருந்து உடைகள் அனுப்பி வைக்கும் காதலி : அழுது புலம்பும் ஐஸ்வர்யா..!

காதலருக்காக தன்னை தாழ்த்தும் அளவுக்கு இறங்கி வந்த சர்ச்சை நடிகை..!

இந்தியன் 2 படத்தில் நடிப்பதற்கு நிறைய நிபந்தனைகள் விதித்த நயன்தாரா..!

Tags :-Saamy2 Tamil movie latest update

Our Other Sites News :-

இதுவா ஜனநாயகம்? : கோத்தபாய கேள்வி