கடத்திய தொழிலதிபருக்காக 50 லட்சம் கேட்டு மிரட்டிய ரவுடிகள்!

0
194

(Rupees threatened  demand 50 lakhs  abducted entrepreneur)

திருவள்ளூர் அருகே தொழிலதிபரை கடத்தி 50 லட்சம் கேட்டு மிரட்டிய ரவுடிகளை போலீஸார் துப்பாக்கி முனையில் சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர்.

சென்னை செங்குன்றம் மொண்டியம்மன் நகரைச் சேர்ந்த தொழிலதிபர் கணேசனை கடந்த 2-ம் தேதி முதல் காணவில்லை, என அவரது சகோதரர் ராமச்சந்திரன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில் அவரது குடும்பத்தாரை செல்போனில் தொடர்பு கொண்ட மர்மநபர்கள், கணேசனை உயிரோடு விடுவிக்க வேண்டுமென்றால் 50 லட்சம் ரூபாய் தர வேண்டும் என மிரட்டல் விடுத்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த ராமச்சந்திரன், மிரட்டல் வந்த செல்போன் எண்ணை செங்குன்றம் போலீஸாரிடம்  கொடுத்துள்ளார்.

தொழில்நுட்ப உதவியுடன் செல்போன் எண்ணை டிராக் செய்த காவல்துறையினர், காஞ்சிபுரம் அருகே திருப்போரூர் பங்களாவில் கணேசன் கடத்தி வைக்கப்பட்டிருப்பதை  அறிந்து அப்பகுதியை சுற்றி வளைத்தனர்.

மேலும் , கணேசனை பத்திரமாக மீட்ட காவல்துறையினர், துப்பாக்கி முனையில் வடகரை சதீஷ், நாயுடுப்பேட்டை சுமன் உள்பட 10 பேரை கைது செய்தனர். மற்றும் , கடத்தலுக்கு பயன்படுத்திய கார், ஆயுதங்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

tags;-Rupees threatened  demand 50 lakhs  abducted entrepreneur

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :