தற்காப்புக்காக என்கவுன்டர் செய்ய வேண்டிய சூழல் உள்ளது – அமைச்சர் ஜெயக்குமார்

0
336
police encounter encounter defense social security indaitamilnews

police encounter encounter defense social security indaitamilnews

போலீசார் தங்களது தற்காப்புக்காகவும், சமூக பாதுகாப்பிற்காகவும் என்கவுன்டர் செய்ய வேண்டிய சூழல் உள்ளதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டை பகுதியில் தலைமைக் காவலரை தாக்கிய ரவுடி ஆனந்தன் காவல் துறையினரால் நேற்றிரவு என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.  இதையடுத்து உதவி ஆய்வாளரை கத்தியால் குத்தியதால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக காவல்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்ஜெயக்குமார், தமிழகம் அமைதி பூங்காவாக உள்ளது.

ஒன்றிரண்டு குற்ற சம்பவங்களைக் கொண்டு சட்டம்-ஒழுங்கு சரி இல்லை என சொல்லக் கூடாது எனவும் இங்கு சுதந்திரமாக செயல்படக் கூடிய சூழல் உள்ளது என்று தெரிவித்தார்.

மேலும் போலீசார் தற்காப்புக்காகவும், சமூக பாதுகாப்பிற்காகவும் என்கவுன்டர் செய்ய வேண்டிய சூழல் வருகிறது என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர் 8 வழிச் சாலை விவகாரத்தில் கருத்துச் சுதந்திரம் உள்ளது. ஆனால் வரம்பு மீறி வன்முறையைத் தூண்டும் வகையில் யார் பேசினாலும் தவறு. 8 வழிச் சாலை விவகாரத்தை சட்ட ரீதியாக அணுகப் போவதாக கமல் கூறுவது அவரின் உரிமை எனவும் தெரிவித்தார்.

police encounter encounter defense social security indaitamilnews

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :