தமிழரசு கட்சியில் நீண்டகாலம் சேவையாற்றியவரே முதலமைச்சர் – சீ.வி.கே.சிவஞானம்

0
85
longest serving TNA next Provincial Council Chief Minister

(longest serving TNA next Provincial Council Chief Minister)

தமிழரசு கட்சியில் நீண்டகாலம் சேவையாற்றியவரையே அடுத்துவரும் மாகாணசபை தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக நியமிப்பது என தமிழரசு கட்சியின் யாழ். மாவட்ட கிளை தீர்மானித்திருப்பதாக கட்சியின் இணை பொது செயலாளர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் குறித்து இன்று அவை தலைவரின் இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

இதன்போது மேலும் அவர் கூறுகையில், கடந்த மாதம் 30 ஆம் திகதி தமிழரசு கட்சியின் யாழ்.மாவட்ட கிளை கூடி அடுத்துவரும் மாகாண சபை தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக யாரை நிறுத்துவது? என்பது தொடர்பில் ஆராய்ந்தது.

இதன்போது கட்சியின் யாப்புக்கு அமைவாக நீண்டகாலம் தமிழரசு கட்சியில் சேவையாற்றிய ஒருவரையே முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தவேண்டும் என்ற தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்மானம் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் ஆகியோருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என்று அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் கூறினார்.

இதேவேளை, நீண்டகாலம் கட்சியில் சேவையாற்றிய ஒருவர் யார்? எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவை அடுத்த மாகாணசபை தேர்தலில் முதலமைச்சராக நிறுத்துவது தொடர்பாக எழுந்துள்ள செய்திகள் குறித்தும் கேட்டபோது

நீண்டகாலம் பணியாற்றியவர் யார்? என்பது இதுவரையில் தீர்மானிக்கப்படவில்லை என கூறினார்.

(longest serving TNA next Provincial Council Chief Minister)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites