கடத்தப்பட்ட தந்தையை கைவிட்டு நாட்டுக்காக விளையாடிய நைஜீரிய அணித் தலைவர்… : கவனத்தை ஈர்த்த சம்பவம்!!!

0
957
John Obi Mikel father kidnapped news Tamil

பிபா உலகக்கிண்ணத்தின் குழுநிலை போட்டிகளுடன் நைஜீரிய அணி வெளியேறியிருந்தது.John Obi Mikel father kidnapped news Tamil

இந்நிலையில் நைஜீரிய அணி, ஆர்ஜன்டீன அணிக்கெதிரான குழுநிலை போட்டியில் மோதவிருந்த தினத்தில் அந்த அணியின் தலைவர் ஜோன் ஒபி மைக்கலின் தந்தை கடத்தப்பட்டிருந்ததாக பரபரப்பு தகவல் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

ஜுன் 26ம் திகதி நைஜீரிய அணி, மெஸ்ஸி தலைமையிலான ஆர்ஜன்டீன அணியை எதிர்கொண்டது.

இந்த போட்டி ஆரம்பிக்க நான்கு மணித்தியாலங்கள் மாத்திரம் இருந்த நிலையில், ஜோன் ஒபி மைக்கலுக்கு தொலைபேசி அழைப்பொன்று வந்திருந்தது.

இந்த அழைப்பில் பேசிய கடத்தல்காரர்கள், ஜோன் ஒபி மைக்கலின் தந்தையை கடத்தியுள்ளதாகவும், 28 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் கொடுத்தால் மாத்திரமே அவரை உயிருடன் விடுவோம். இல்லையென்றால் அவரை கொலைசெய்து விடுவோம் என மிரட்டியுள்ளனர்.

ஜோன் ஒபி மைக்கலின் தந்தையான பா மைக்கல் ஒபி, சௌத் ஈஸ்டன் பகுதியில் மரணவீடு ஒன்றுக்கு சென்று தனது சாரதியுடன், வீடு திரும்பியுள்ளார்.

அவர் திரும்பி வரும்போது மகுர்தி-எனுகு அதிவேக பாதையில் வரும் போது, பா மைக்கல் ஒபி கடத்தப்பட்டுள்ளார். பின்னர் பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தி பா மைக்கல் ஒபி மற்றும் சாரதியை காப்பாற்றியுள்ளனர்.

எனினும் அவரது மண்டையோட்டுப்பகுதியில் காயங்கள் ஏற்பட்டிருந்ததுடன், கடத்தல்காரர்கள் கொடூரமாக கொடுமைப்படுத்தியயுள்ளனர். இதனால் அவரது உடலில் பல இடங்களில் தையல் போடக்கூடிய அளவு காயங்கள் இருந்துள்ளது. எனினும் வைத்திய சிகிச்சைக்கு பின்னர் அவர் வீடு திரும்பியுள்ளார் என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

தந்தையின் கடத்தல் விவகாரம் குறித்து தெரிவித்த ஜோன் ஒபி மைக்கல்,

“நான் குழப்பமடைந்திருந்தேன். எனக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. ஆனால் ஒன்றை மட்டும் புரிந்துக்கொண்டேன். 180 மில்லியன் மக்களின் கனவை சிதைத்துவிட்டு செல்ல எனது மனம் இடம் கொடுக்கவில்லை.

இதனால் நாடும், மக்களும் தான் முக்கியம் என உணர்ந்து, நான் எனது அணிக்காக, நாட்டுக்காக விளையாட முடிவுசெய்தேன். அவர்கள் தந்தை கடத்தப்பட்ட விடயத்தை அதிகாரிகளுக்கு கூறினால் தந்தையை உடனே சுட்டுக்கொன்று விடுவதாக அச்சுறுத்தினர்.

தந்தை கடத்தப்பட்ட விடயத்தை மனதில் வைத்துக்கொண்டு, யாரிடமும் கலந்துரையாடாமல் இருந்தேன். எனது பயிற்றுவிப்பாளர் மற்றும் சக வீரர்களின் கவனத்தை திருப்ப விரும்பாததால், யாருக்கும் இந்த விடயத்தைப் பற்றி கூறவில்லை. பயிற்றுவிப்பாளரிடம் கூற மனம் வந்தும் நான் அதனை செய்யவில்லை.

எனினும் உளவுத்துறைக்கு கிடைத்த தகவிலின் படி, சுற்றிவளைத்த பொலிஸார் காட்டுப்பகுதியில் வைத்து நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஜோன் ஒபி மைக்கலின் தந்தையை காப்பாற்றினர்.

ஜோன் ஒபி மைக்கலின் தந்தை இரண்டாவது தடவைாயக கடத்தப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் கடந்த 2011ம் ஆண்டு கடத்தப்பட்டிருந்த இவர் 10 நாட்களுக்கு பின்னர் மீட்கப்பட்டிருந்தார்.

இதேவேளை நைஜீரிய உதைப்பந்தாட்ட வீரர்களின் வீட்டுக்கு தற்போது அதிக பாதுகாப்பு வழங்கப்பட்டள்ளதாக நைஜீரிய பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

John Obi Mikel father kidnapped news Tamil, John Obi Mikel father kidnapped news Tamil, John Obi Mikel father kidnapped news Tamil