மேடையேறினார் கோத்தபாய : அரசியல் பயணம் ஆரம்பம்

0
726
gotabaya rajapaksa starts political

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தனது அரசியல் பயணத்தை இன்று ஆரம்பித்தார். (gotabaya rajapaksa starts political)

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோருடன் இணைந்து ஒரே மேடையில் கடவுள் வணக்கம் செலுத்தி தனது அரசியல் பயணத்தை கோத்தபாய ராஜபக்ஷ ஆரம்பித்தார்.

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, இன்று முதன்முறையாக பத்தரமுல்லை நெலும் மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீ லங்க பொதுஜன முன்னணியின் காரியாலயத்துக்கு சென்று அரசியல் பயணத்தில் காலடி வைத்தார்.

கோத்தபாய ராஜபக்ஷ மேடையேறிய போது அவருக்கு பலத்த வரவேற்பளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தும் மாகாண சபை உறுப்பினர்கள் குழுவொன்று, நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் உறுப்புரிமையை இதன்போது பெற்றுக்கொண்டுள்ளனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags:gotabaya rajapaksa starts political,gotabaya rajapaksa starts political,gotabaya rajapaksa starts political,