மகிந்தவின் தேவைக்காக விஜயகலா புலியை அழைத்திருக்கலாம்; ஐதேக

0
353
Vijayakala’s statement trap Mahinda

விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் தலைதூக்க வேண்டும் என்று இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கூறிய கருத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன கண்டனம் வெளியிட்டுள்ளார். (Vijayakala’s statement trap Mahinda)

இன்று காலை கம்பஹா பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

நல்லாட்சி அரசாங்கம் தமிழ் மக்களுக்கு பல விடயங்களை ஆற்றியுள்ளதாகவும், எனினும் தமிழ் மக்களுக்காக விடுதலைப் புலிகள் மீண்டும் தலைதூக்க வேண்டும் என்று கூறுவதை ஒருபோதும் ஏற்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

குறிப்பாக அரசியல் இலாபங்களுக்காக இவ்வாறான கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் எழுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

நியூயோர்க் டைம்ஸ் சர்ச்சையை மறக்கடிப்பதற்காக மஹிந்த ராஜபக்ஷவின் தேவைக்கு ஏற்ப விஜயகலா மகேஸ்வரன் இவ்வாறு பேசியிருக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு தரப்பினர் இணைந்து இதுதொடர்பில் தீர்மானம் எடுக்க வேண்டும் என்றும், பதவியை கருத்திற் கொள்ளாமல் சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்றும் காவிந்த ஜயவர்தன வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Vijayakala’s statement trap Mahinda