மந்திரவாதி என வீட்டிற்குள் நுழைந்து பெண்களை வன்புணர்வுக்கு உட்படுத்திய காமுகன்!!! : களுத்துறையில் சம்பவம்…

0
881
Sri Lanka man Arrest abuse womens

உடவலவ, அம்பாறை, இரத்தினபுரி மற்றும் டிக்வெல்ல பகுதிகளில் தான் ஒரு விசேட அதிரடிப்படை அதிகாரி எனக் கூறி பல்வேறு குற்றச்சசெயல்களில் ஈடுபட்ட விசேட தேவையுடைய நபரொருவரை களுத்துறை -பேருவலை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். Sri Lanka man Arrest abuse womens

விபத்தொன்றில் தனது வலது காலை இழந்துள்ள குறித்த சந்தேக நபர் தன்னை ஒரு விசேட அதிரடிப்படை அதிகாரி என மற்றவர்களிடம் தன்னை அடையாளங்காட்டிக்கொண்டு பணம், தங்க ஆபரணங்கள் மற்றும் உடமைகளை பறித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் முச்சக்கரவண்டியொன்றை வைத்துள்ளதுடன், அதனூடாகவே தனது மோசடி வேலைகளை தொடர்ந்துள்ளார்.

இவர் கள்ளத்தொடர்புகளில் ஈடுபடும் மனைவி மற்றும் கணவன்மார்களை குறிவைத்து, அவர்கள் செல்லும் விடுதிகளுக்கு அருகில் முச்சக்கரவண்டியை நிறுத்தி வைப்பார்.

அவர்கள் வெளியில் வரும் போது, தன்னுடைய தொலைபேசியில் புகைப்படத்தை எடுத்துக்கொண்டு அவர்கள் செல்லும் வழியை பின்தொடர்வார். தொடர்ந்து அவர்கள் எந்த வாகனத்தில் சென்றாலும், அவர்கள் இறங்கும் இடத்தில், அவர்களை மறித்து புகைப்படத்தை காட்டி பணம் பறித்து வந்துள்ளார்.

இதில் ஒவ்வொருவரிடமும் தான் ஒரு விசேட அதிரடிப்படை அதிகாரி எனவும், மோதலின் போது தனது காலை இழந்ததாகவும் தெரிவிக்கும் இவர், தற்போதும் அதிரடிப்படை வீரராக செயற்படுகின்றேன் எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கள்ளத்தொடர்புகளில் ஈடுபடும் இருவரையும் முச்சக்கரவண்டியில் ஏறுமாறும், அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று முறையிடுவதாகவும் அச்சுறுத்தியுள்ளார். இதற்கு பயந்த சிலர் அவரிடம் நகை மற்றும் பணம் என்பவற்றை கொடுப்பதுடன், ஒரு சில பெண்கள் தனது குடும்பத்துக்கு பயந்து அவருடன் தனியாக அறைக்கு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு குற்றச் செயலில் ஈடுபடும் இவர், தன்னை ஒரு மந்திரவாதி என அடையாளப்படுத்தியும் குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளார். மந்திரவாதி என வீடுகளுக்கு செல்லும் இவர், பணம் மற்றும் உடமைகளை பெற்றாலும், முக்கியமாக பெண்களை வண்புணர்வுக்கு உட்படுத்தியும் உள்ளார்.

மந்திரம் செய்வதற்கு ஒரே காம்பில் இருக்கும் மூன்று எலுமிச்சை பழங்கள் வேண்டும் எனக் கூறி கணவனை அனுப்பிவிட்டு, வீட்டில் உள்ள மனைவியை வண்புணர்வுக்கு உட்படுத்தியதாகவும் இவர் மீது குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

அத்துடன் இவரது முச்சக்கரவண்டியின் இலக்கங்களை பலர் பொலிஸ் நிலையத்துக்கு அளித்து, முறைப்பாடு செய்துள்ளனர் என்பதுடன், இவருக்கு பல பிடியாணைகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரை கைதுசெய்யும் போது 2 தங்க மாலைகளை கைப்பற்றியுள்ள பேருவலை பொலிஸார், இவரை இன்று களுத்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் குறிப்பிட்டனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Sri Lanka man Arrest abuse womens,Sri Lanka man Arrest abuse womens,