ஹிட்லரையும் பிரபாகரனையும் ஒப்பிட்டு கருத்து வெளியிட்ட ரஞ்சன் : விஜயகலாவின் கருத்துக்கு பதிலடி!

0
474
Ranjan Ramanayake response Vijayakala Maheswaran statement

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் பேரெழிச்சியுடன் உருவாக வேண்டும் என்று இராஜங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் வெளியிட்டிருந்த கருத்துக்கு பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். Ranjan Ramanayake response Vijayakala Maheswaran statement

யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றின் போது, யாழ்ப்பாணம் சுழிபுரத்தில் பாடசாலை சிறுமி ரெஜினா கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் விஜயகலா மகேஸ்வரன் பிரபாகரன் மீண்டும் உருவாக வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

இந்த கருத்துக்கு நாடுமுழுவதும் பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

இந்நிலையில் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தனது எதிரப்பை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

இவரின் டுவிட்டர் பக்கத்தில்,

“மிகவும் பொறுப்பற்ற அறிக்கையை விஜயகலா மகேஸ்வரன் வெளியிட்டுள்ளார். இதற்கு நாம் எமது கண்டனத்தை தெரிவிக்கின்றோம்.

இந்த கருத்தானது அஸ்கிரிய பீடத்தின் துணை தலைவர் வெடருவே உபாலி தேரர் வெலியிட்டிருந்த “ஹிட்லர்” கருத்துக்கு ஒப்பானதுதான். விடுதலைப்புலிகள் இருந்த காலத்தில் பொதுமக்கள், குழந்தைகள் மற்றும் இராணுவ வீரர்களை கொன்று சட்டத்தை நிறுவியதை நாம் பார்த்துள்ளோம்.

இதனால் மீண்டும் எமக்கு ஹிட்லரோ? பிராபகரனோ? தேவையில்லை” என பதிவிட்டுள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Ranjan Ramanayake response Vijayakala Maheswaran statement,Ranjan Ramanayake response Vijayakala Maheswaran statement