கட்டிலில் படுத்திருந்த பெண்: ரகசியமாக புகுந்த காமுகன் – வெல்லவாயவில் சம்பவம்

0
266
Okkampitiya Bed Suspect

பெண் ஒருவர் தனது இல்லத்தில் நித்திரை கொண்டிருந்தபோது, அவர்களின் வீட்டுக்குள் பிரவேசித்து இவர்கள் நித்திரைசெய்துக்கொண்டிருந்த கட்டிலின் கொசு வலையை அகற்ற முயற்சி செய்த நபரை சந்தேகத்தின் பேரில் ஒக்கம்பிடிய பொலிஸார் கைது செய்துள்ளனர். Okkampitiya Bed Suspect

ஒக்கம்பிடிய, மாளிகாவில – நியதெல்ல பிரதேசத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சந்தேக நபர் குறித்த பிரதேசத்தில் வசிக்கும் 33 வயதுடையவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேகநபர் இரவு 10 – 11 மணிக்கிடையில் வீட்டுக்குள் புகுந்துள்ளார்.

அவர் மின்சார விளக்குகளை அனைத்து இந்தப் பெண் மற்றும் அவளின் பிள்ளைகள் நித்திரை கொண்டிருந்த கட்டிலின் கொசு வலையை நீக்க முயற்சி செய்துள்ளார்.

இதன்போது குறித்த பெண் விழித்தெழுந்த பெண் பொலிச் அவசர அழைப்பு பிரிவுக்கு அழைத்து விடயத்தைக் கூறியுள்ளார்.

உடனே ஒக்கம்பிடிய பொலிஸார் விரைந்துச் சென்று சந்தேக நபரை கைது செய்துள்ளனர். சந்தேக நபர் வெல்லவாய நீதவான் முன் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.