போர்க்களமாக மாறிய மைதானம் : ஒட்டுமொத்தமாக மோதிக்கொண்ட வீரர்கள்!!! (காணொளி)

0
447
Huge Basketball Fight Australia vs Philippines 2018

அவுஸ்திரேலியா மற்றும் பிலிப்பைன்ஸ் அணிகளுக்கிடையிலான உலகக்கிண்ண தகுதிகாண் கூடைப்பந்தாட்ட போட்டி தொடர்பான செய்திகள் தற்போது உலகம் முழுதும் வைரலாக பரவி வருகின்றது. Huge Basketball Fight Australia vs Philippines 2018

இலங்கை மற்றும் இந்தியாவில் கூடைப்பந்தாட்டம் மிகப்பெரிய அளவில் பிரசித்திப்பெறாவிட்டாலும், ஐரோப்பியா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா மற்றும் ஆசியாவின் சில நடுகளில் அதிகம் விரும்பப்படும் விளையாட்டாக உள்ளது.

இந்நிலையில் உலகக்கிண்ணத்திற்கான தகுதிகாண் போட்டிகள் விறுவிறுப்படைந்துள்ள நிலையில், நேற்று நடைபெற்ற அவுஸ்திரேலியா மற்றும் பிலிப்பைன்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டியில் இடம்பெற்ற சண்டைக்காட்சி ரசிகர்களை வேதனைக்குள்ளாக்கியது.

சர்வதேச உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் மூலமாக நடத்தப்படும் இந்த போட்டியில், பிலிப்பைன்ஸ் மற்றும் அவுஸ்திரேலிய வீரர்கள் கடுமையான சண்டையில் ஈடுபட்ட காட்சி சமுகவலைத்தளங்களில் வரைலாக பரவி வருகின்றது.

நேற்றைய போட்டி நிறைவடைய 4 நிமிடங்கள் மாத்திரம் இருந்த போது, அவுஸ்திரேலியா 79 புள்ளிகளையும் பிலிப்பைன்ஸ் 48 புள்ளிகளையும் பெற்றிருந்தன.

இதன்போது பிலிப்பைன்ஸ் வீரரொருவர் அவுஸ்திரேலிய வீரரை தள்ளிவிட, மற்றுமொரு அவுஸ்திரேலிய வீரர் ஓடிவந்து, குறித்த பிலிப்பைன்ஸ் வீரர் முகத்தில் குத்தினார். இதனால் பிலிப்பைன்ஸ் வீரர் தரையில் விழுந்தார்.

பின்னர் கோபமடைந்த பிலிப்பைன்ஸ் வீரர்கள் அவுஸ்திரேலிய வீரர்களை மைதானத்தை சுற்றிலும் துரத்தி அடித்தனர். விளையாடிய வீரர்கள் மாத்திரமின்றி, அமர்ந்திருந்த மேலதிக வீரர்களும் மைதானத்துக்குள் நுழைந்து அவுஸ்திரேலிய வீரர்களை கடுமையாக தாக்கினர். இரண்டு அணி வீரர்கள் தொடர்ந்தும் சண்டையில் ஈடுபட, மைதானத்துக்கு வெளியில் இருந்த ரசிகர்களில் ஒருவர் கதிரையொன்றை வீரர்கள் மீது எறிந்தார்.

பின்னர் போட்டி ஒரு வழியாக சண்டை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இந்நிலையில் சர்வதேச கூடைப்பந்தாட்ட சம்மேளனம் தாக்குதல் சம்பவம் குறித்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

காணொளி இதோ…

https://www.youtube.com/watch?v=5ORnb1y-iJE

Video Credit – ESPN UK

Huge Basketball Fight Australia vs Philippines 2018,Huge Basketball Fight Australia vs Philippines 2018,

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :