மகிந்தவுக்கு பண உதவி விவகாரம்! சீனா அதிரடியாக மறுப்பு!

0
133
China Government Disagree Mahinda Election Money Donation

தேர்தல் செலவுகளுக்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு சீன நிறுவனம் பணம் வழங்கியதாக நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையில் வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என ஸ்ரீலங்காவிலுள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது. China Government Disagree Mahinda Election Money Donation

‘சீனா சிறிலங்காவிடமிருந்து துறைமுகத்தை பெற்றெடுத்த முறை’ எனும் தலைப்பின் கீழ் நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை கடந்த 25 ஆம் திகதி செய்தியொன்றை வெளியிட்டிருந்தது.

இந்த செய்தியில் கடந்த தேர்தலின்போது முன்னள் ஜனாதிபதி மிஹிந்த ராஜபக்சவுக்கு தேர்தல் செலவுகளுக்காக 7.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட்டள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்தநிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக சைனா ஹாபர் எனும் நிறுவனம் பணம் வழங்கியதாகக் கூறப்படும் செய்தி உண்மைக்கு புறம்பானது என சிறீலங்காவிலுள்ள சீன தூதரகமும் கூறியுள்ளது.

எனினும் இந்தச் செய்தி தொடர்பில் பொலிஸ்மா அதிபரின் உத்தரவின் படி பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :