புற்றுநோய்க்கான மருந்து விலை குறைப்பு?

0
231
Cancer drugs price reduced Sri Lanka news Tamil

சுகாதாரம், ஊட்டச்சத்து மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் ராஜித சேனாரத்ன, புற்றுநோய்க்கான மருந்து விலை 64 ஆயிரம் ரூபாவால் குறைக்கப்படும் என தெரிவித்துள்ளார். Cancer drugs price reduced Sri Lanka news Tamil

ஆயுர்வேத திணைக்களம் மற்றும் இங்கிரிய பிரதேச செயலகம் இணைந்து அமைத்துள்ள “பொசன மந்திரய” எனும் ஆயுர்வேத நிலையத்தை திறந்து வைத்த போது அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

தற்போது புற்றுநோய்க்கான மருந்து செலவுகள் 2 இலட்சத்து 85 ஆயிரம் தொடக்கம் ஒரு இலட்சத்து 44 ஆயிரம் ரூபா வரை செல்கின்றது. இந்த செலவை குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதன் ஒரு கட்டமாக 64 ஆயிரம் ரூபாவை குறைப்பதற்கு அரசாங்கம் முடிவுசெய்துள்ளது.

முன்னதாக வருடத்துக்கு 1300 மில்லியன் ரூபா வரை புற்றுநோயாளர்கள் செலவளித்து வந்தனர். ஆனால் தற்போது குறித்த தொகை 4800 மில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது. நோயளிகளின் எண்ணிக்கையும் குறையவில்லை.

எவ்வாறாயினும் அரசாங்கம் புற்றுநோயாளர்களுக்கான செலவீனத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Cancer drugs price reduced Sri Lanka news Tamil,Cancer drugs price reduced Sri Lanka news Tamil