TAMIL NEWS - Read Today news in Tamil. Tamil News covered Indian, Sri Lankan and World wide Braking News and Top stories in Tamil & English Language.

TAMIL NEWS - Read Today news in Tamil. Tamil News covered Indian, Sri Lankan and World wide Braking News and Top stories in Tamil & English Language.

Home France சிறையிலிருந்து உலங்குவானூர்தி உதவியில் தப்பிய அசாத்திய கைதி

சிறையிலிருந்து உலங்குவானூர்தி உதவியில் தப்பிய அசாத்திய கைதி

0
383
tamilnews thief flees French jail thief flees helicopter

(tamilnews thief flees French jail thief flees helicopter)

திருட்டுக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் உலங்கு வானூர்தி மூலம் தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்ஸில் கடந்த 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற கொள்ளையில் தொடர்புடையவன் ரெடோயின் ஃபெய்ட்(46).

அந்த நாட்டின் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் இடம்பெற்று பின்னர் கைதான நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இதையடுத்து, பாரிஸ் நகரின் புறநகர் பகுதியில் உள்ள ரியூ பகுதியில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஃபெயிட், 3 கைதிகள் துணையுடன் சிறையில் இருந்து தப்பிச் சென்றான்.

அவன் வெளியே ஓடிவந்ததும் ஆயுதங்களுடன் வந்த மர்ம நபர்கள் அவனை ஹெலிகாப்டரில் ஏற்றி அங்கிருந்து அழைத்து சென்றனர்.

இந்த சம்பவம் பாரிஸ் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவனை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டரை புறநகர் பகுதியில் கண்டுபிடித்த பொலிஸார் ரெடோயின் ஃபெய்ட்-ஐ கைது செய்ய பாரிஸ் நகரம் முழுவதும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

முன்னதாக, கடந்த 2013-ம் ஆண்டிலும் வெடிகுண்டால் சிறை சுவரை உடைத்து தப்பிச்சென்ற இவன் பின்னர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

(tamilnews thief flees French jail thief flees helicopter)
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites