பாடசாலைகள் மூடப்படமாட்டாது – அவரவர் தேவைக்கேற்ப தீர்மானம் எடுக்கமுடியாது – அகிலவிராஜ்

0
388
tamilnews general opposite akilawiraj warning wijayakala issue

(tamilnews Akilaviraj announced schools not closed Wednesday)

நாடாளவியாக உள்ள பாடசாலைகள் எதிர்வரும் புதன்கிழமை மூடப்படமாட்டாது என்று அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அறிவித்துள்ளார்.

பத்தரமுல்லையில் அமைந்துள்ள கல்வி அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், போலி பிரசாரங்களை ஊடகங்களின் மூலம் வழங்குவதன் ஊடாக முழு பாடசாலை கட்டமைப்புக்கும் பாரிய அநீதி இழைக்கப்படுகிறது என்று குறிப்பிட்டார்.

ஊழல் மோசடி, விரயம், திருட்டு போன்ற செயற்பாடுகளில் இருந்து கல்வித்துறை மீட்கப்பட்டுள்ளது.

நியமனங்களும், கல்வி உயர்வுகளும் அரசியல் பேதங்கள் இன்றி வழங்கப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

தொழிற்சங்கங்களுக்கும், ஊடக நிறுவனங்களுக்கும் அவர்களின் தேவைக்கேற்ப பாடசாலைகளை மூட முடியாது என்றும் அமைச்சர் கூறினார்.

4 ஆம் திகதி பாடசாலை மூடப்படுமென வெளிவரும் தகவல்களால் 42 இலட்ச மாணவர்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

தனிநபர்களின் அரசியல் தேவைகளுக்காக கல்வியுடன் விளையாடுவதை தவிர்க்குமாறு சகலரிடமும் வேண்டுகோள் விடுப்பதாகவும் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

(tamilnews Akilaviraj announced schools not closed Wednesday)

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :