பெனால்டி ஷுட் அவுட்டால் வெளியேறிய ஸ்பெயின்… : குரோஷியாவும் தகுதி!!!

0
202
Russia vs Spain world cup 2018

பிபா உலகக்கிண்ணத்தில் நேற்று நடைபெற்ற இரண்டு போட்டிகளும் பெனால்டி ஷுட்-அவுட் மூலமாக நிறைவுக்கு வந்தது.

உலகக்கிண்ணத்தின் நொக்கவுட் சுற்றுகள் நடைபெற்று வரும் நிலையில், தொடரின் மீதான எதிர்பார்ப்பும், விறுவிறுப்பும் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது.

நொக்கவுட் சுற்றின் ஆரம்பத்தில் பிரபல அணிகளான ஆர்ஜன்டீனா மற்றும் போர்த்துகல் அணிகள் தோல்வியடைந்து வெளியேறியிருந்தன.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் ஸ்பெயின் மற்றும் ரஷ்ய அணிகள் மோதின.

விறுவிறுப்பான இந்த போட்டியில் இரண்டு அணிகளும் தலா ஒவ்வொரு கோல்களை அடித்தன. போட்டியில் மேலதிகமாக 32 நிமிடங்கள் வழங்கப்பட்டும் எந்த அணிகளாலும் மேலதிக கோல்களை பெறமுடியவில்லை.

இறுதியில் போட்டியில் பெனால்டி ஷுட் அவுட் வழங்கப்பட, ரஷ்ய அணி 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

முதலிரண்டு பெனால்டிகளையும் இரண்டு அணிகளும் அடித்து 2-2 சமனிலையில் இருந்த போது, ஸ்பெயின் அணியின் கொக் பெனால்டி வாய்ப்பை தவறவிட, அடுத்த பெனால்டிகளை இலகுவாக அடித்து, ரஷ்யா காலிறுதிக்கு முன்னேறியது.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் குரோஷிய அணி பெனால்டி ஷுட் அவுட் மூலமாக டென்மார்க் அணியை 1-1 (3-2) என வீழ்த்தி காலிறுதிக்கு நுழைந்தது.

பெனால்டி ஷுட் அவுட்டின் தங்களது முதல் பெனால்டிகளை இரண்டு அணிகளும் தவறவிட்டன.

தொடர்ந்து கொடுக்கப்பட்ட அடுத்த இரண்டு பெனால்டிகளையும், இரண்டு அணிகளும் அடித்து போட்டியை 2-2 என சமனிலைக்கொண்டு வந்தன.

இதனையடுத்து டென்மார்க் அணிக்கு வழங்கப்பட்ட 2 கோல்களும் தவறவிடப்பட, குரோஷிய அணி ஒரு பெனால்டியை தவறவிட்டிருந்தாலும், அடுத்த பெனால்டி வாய்ப்பில் கோலடித்து காலிறுதிக்கு முன்னேறியது.

இதன்படி தற்போது உலகக்கிண்ண காலிறுதிக்கு பிரான்ஸ், உருகுவே, ரஷ்யா மற்றும் குரோஷிய அணிகள் தகுதிபெற்றுள்ளன.

<<மேலும் பல விளையாட்டுச் செய்திகளுக்கு>>

<<எமது மேலதிக செய்தி இணையத்தளங்கள்>>

Russia vs Spain world cup 2018, Russia vs Spain world cup 2018,Russia vs Spain world cup 2018