TAMIL NEWS - Read Today news in Tamil. Tamil News covered Indian, Sri Lankan and World wide Braking News and Top stories in Tamil & English Language.

TAMIL NEWS - Read Today news in Tamil. Tamil News covered Indian, Sri Lankan and World wide Braking News and Top stories in Tamil & English Language.

Home Uncategorized முதலமைச்சர் வேட்பாளர் மாவை என்பது உறுதியில்லை! சிறிதரன் பேச்சால் மீண்டும் குழப்பம்!

முதலமைச்சர் வேட்பாளர் மாவை என்பது உறுதியில்லை! சிறிதரன் பேச்சால் மீண்டும் குழப்பம்!

0
372

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கடந்த முறை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட்டிருந்தார். MP Sritharan Statement Next North Provincial Chief Minister

எனினும், கடந்த சில ஆண்டுகளாக அவருக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான பங்காளிக் கட்சியான தமிழ் அரசுக் கட்சிக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டிருப்பது இம்முறை வேட்பாளர் தொடர்பில் பல சர்ச்சைகளை கிளப்பிவிட்டுள்ளது.

எனினும் வடக்கு மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா போட்டியிட வேண்டும் என்பதே, தமிழ் அரசுக் கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்களின் விருப்பம்.

இதனை கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அண்மைய பேட்டி ஒன்றில் தெளிவாக கூறியுள்ளார்.

“வடக்கு மாகாண சபைக்கான முதலமைச்சர் வேட்பாளர் குறித்து இன்னமும் தமிழ் அரசுக் கட்சி முடிவு எதையும் எடுக்கவில்லை.

ஆனால், பெரும்பாலான தமிழ் அரசுக் கட்சி உறுப்பினர்களின் தெரிவாக இருப்பவர் மாவை சேனாதிராசா தான்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites