மொஹமது சாலாஹ்வின் ஒப்பந்தக் காலத்தை நீடித்த லிவர்பூல்

0
707
Mohamed Salah signs new deal Liverpool

லிவர்பூல் அணியின் முன்னணி வீரர் மொஹமது சாலாஹ்வின் ஒப்பந்தக்காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

மொஹமது சாலாஹ் கடந்த 2017ம் ஆண்டு லிவர்பூல் அணியில் இணைந்து விளையாடி வருகின்றார். இதுரையில் 52 போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 44 கோல்களை அடித்துள்ளார்.

அதுமாத்திரமின்றி தொழில்முறை உதைப்பந்தாட்ட வீரர்கள் சங்கத்தின், 2017ம் ஆண்டுக்கான சிறந்த வீரர் விருதையும் வென்றிருந்தார்.

முன்னணி வீரராக வலம் வரும் இவர், நடைபெற்று முடிந்த பிரீமியர் லீக் சீசனிலும் 38 போட்டிகளில் 32 கோல்களை அடித்திருந்தார்.

இந்நிலையில் சலாஹ்வின் ஒப்பந்தக்காலம் நீடிப்பு குறித்து கருத்து தெரிவித்த லிவர்பூல் அணியின் பயிற்றுவிப்பாளர் ஜெர்கன் குளொப்,

“சலாஹ் லிவர்பூல் அணி மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளார். அதேபோன்று நாங்களும் அவர் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளோம்.

அணிக்காக பாடுபட்டு, சிறந்த முறையில் உழைக்கும் ஒவ்வொரு வீரருக்கும் இந்த செய்தி மகிழ்ச்சியானதுதான். சாலாஹ்வின் திறமை நான் சொல்லித்தெரியவேண்டியதில்லை. அவரை பார்க்கும் அனைவருக்கும் அது தெரியும்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Mohamed Salah signs new deal Liverpool, Mohamed Salah signs new deal Liverpool, Mohamed Salah signs new deal Liverpool