தமிழீழ வரைபடத்தில் கண்ணகை அம்மன் காட்சி; புலனாய்வுப் பிரிவினர் தீவிர விசாரணை

0
794
Kannagi Amman scene Eelam map Intelligence investigation

ஆனைக்கோட்டை கண்ணகை அம்மன் ஆலயத்தில் தமிழீழ வரைபடத்துடன் கண்ணகை அம்பாள் வீதியுலா வந்தமை தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். (Kannagi Amman scene Eelam map Intelligence investigation)

கண்ணகை அம்மன் ஆலயத்திற்குள் 10 க்கும் மேற்பட்ட புலனாய்வு பிரிவினர் சென்று, ஆலய நிர்வாகம் மற்றும் இளைஞர் மன்றத்தினரிடம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத் திருவிழா கடந்த 14 ஆம் திகதி ஆரம்பமாகி கடந்த இரு தினங்களுக்கு முன்னர் தேர்த் திருவிழா நடைபெற்றது.

இந்த நிலையில், கடந்த 29 ஆம் திகதி பூங்காவன திருவிழா நடைபெற்ற போது, திருவிழாவின் வெளி வீதியில் தமிழீழ வரைபடத்தில் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அம்பாள் வலம் வந்தார்.

இந்த படம் சமூக வலைத்தளங்களில் பரவியதை தொடர்ந்து அனைவராலும் பரவலாக பேசப்பட்டது.

இந்த நிலையில், குறித்த ஆலயத்திற்குள் சென்ற காங்கேசன்துறை, மானிப்பாய், யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் நிலையப் புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை, இராணுவ புலனாய்வு பிரிவினரும் அங்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

வழிபாட்டு ரீதியாக முன்னெடுக்கப்பட்ட ஒரு நிகழ்வுக்கு இவ்வாறான அச்சுறுத்தல்கள் ஏற்படுத்துவது குறித்து மக்கள் மற்றும் ஆலய நிர்வாகத்தினர்களிடையே விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Kannagi Amman scene Eelam map Intelligence investigation