காவத்தையில் பெரும் குழப்பம்: 31 பேர் காயம்

0
220
Kahawatte Perehera elephant

காவத்தையில், பெரஹேரவில் நேற்றைய தினம் யானைத்தாக்குதலுக்குள்ளான 31 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். Kahawatte Perehera elephant

இதில் 19 பேர் பெண்கள் எனவும், 12 பேர் ஆண்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேற்படி சம்பவத்தின் போது பொறுப்பாக இருந்த பொலிஸ் அதிகாரியொருவரும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காவத்தை, மிஹிந்து பெரஹேரவிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. முதலில் ஒரு யானை குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதன்பின்னரே மற்றைய யானைகள் சிலவும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. இதனையடுத்து அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.