குளியாப்பிட்டி பகுதியில் கைக்குண்டு தாக்குதல் : நபர் தப்பியோட்டம்…

0
170
Hand grenade attack Kuliyapitiya news Tamil

குருணாகல் – குளியாப்பிடி பகுதியில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற கைக்குண்டு தாக்குதலில் நான்கு பேர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்த நால்வரும் குளியாப்பிட்டிய வைத்தியசாலையில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த கைக்குண்டை நபர் ஒருவர் வீட்டின் மீது எறிந்துள்ளதாகவும், தனிப்பட்ட விரோதங்களுக்காக இந்த தாக்குதல் சம்பவத்தை மேற்கொண்டுள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எவ்வாறாயினும் சம்பவத்துடன் தொடர்புடைய நபர் தப்பியோடியுள்ளார் என பொலிஸார் தெரிவித்ததுடன், குறித்த நபர் அடையாளங்காணப்பட்டுள்ளதாகவும் அவரை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேவேளை சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குளியாப்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Hand grenade attack Kuliyapitiya news Tamil,Hand grenade attack Kuliyapitiya news Tamil,Hand grenade attack Kuliyapitiya news Tamil