குப்பை கொட்டுபவர்களே உஷார்!

0
165

கொழும்பு நகரில் உள்ள குப்பை கொட்டும் இடங்களில் சி.சி.டிவி கமெராக்கள் பொருத்தப்படவுள்ளன. Colombo Garbage CCTV

இத்தகவலை கொழும்பு மாநகர சபையின் துணை ஆணையாளர் லலித் விக்ரமரத்ன வெளியிட்டுள்ளார்.

சி.சி.டிவி கமெராக்களை பொருத்துவதற்கான கேள்விமனுக்கள் கோரப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாளாந்தம் கொழும்பில் சுமார் 50 டன் குப்பைகள் சேர்வதாக துணை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை சட்டவிரோதமாக குப்பைகளை கொட்டுபவர்களை பிடிப்பதற்கு விசேட 24 மணித்தியால தேடல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.