சிறுமியிடம் பேசிய 5 நபரை கொன்ற 23 பேர் கைது!

0
182
23 people arrested kidnap child

(23 people arrested kidnap child)

மகாராஷ்டிராவில் குழந்தையை கடத்த வந்ததாகக் கருதி, 5 பேர் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் 23 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சோலாப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் 7 பேர், துலே மாவட்டத்தில் உள்ள ரெய்ன்படா பகுதியில் உள்ள வீடுகளில் உணவு கேட்டுள்ளனர்.

வீடு ஒன்றில் நின்று கொண்டிருந்த  சிறுமியுடன்  அவர்கள் பேசியதை பார்த்த சிலர், அவர்கள் குழந்தை கடத்தல்காரர்கள் என நினைத்து தாக்கியுள்ளனர். 2 பேர் தப்பியோடிவிட்ட நிலையில்,  அங்கு சிக்கிய 5 பேரை, மேலும் சில பொதுமக்கள் சேர்ந்து கொண்டு தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதில், அவர்கள் 5 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததை  அடுத்து,  மேலும் 11 பேரை கைது செய்துள்ளனர். 5 பேர் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் மேலும் சிலரை  தேடி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

tags;-23 people arrested kidnap child

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :