இலங்கை அணியினதும், முகாமையாளர்களதும் தீர்மானம் தவறானது – பைசர் முஸ்தபா

0
391
no connection Boundary Statement my Ministry Faiser Mustafa

(Sri Lankan Cricket Control Board impose private sanctions Chandimal)

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பந்தின் தன்மையை மாற்ற முயற்சித்தமைக்காக அணித்தலைவர் தினேஸ் சந்திமாலுற்கு எதிராக இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை தனிப்பட்ட தடைகளை விதிக்காது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆடுகளத்திற்குள் நுழைவதில்லை என்ற இலங்கை அணியினதும், முகாமையாளர்களதும் தீர்மானம் தவறானது என்பதை விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபா ஏற்றுக்கொண்டுள்ளார்.

அதேவேளை, இலங்கை கிரிக்கெட் சபை எந்த தடைகளையும் விதிக்காது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அணியினர் மைதானத்திற்குள் நுழையாதது குறித்து நான் குழப்பமடைந்தேன் அது பிழையான விடயம்.

அது இடம்பெற்றிருக்ககூடாது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை அணி வீரர்கள் அணித்தலைவருக்கு ஆதரவளிக்க முயல்கின்றனர் என்பதும் எனக்கு தெரியும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்யுள்ளார்.

அணியின் செயற்பாடு குறித்து நாங்கள் வேதனையடைகின்றோம். நாங்கள் உயர்ந்த பட்ச ஒழுக்கத்தை பேண வேண்டும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சந்திமல் தவறிழைக்கவில்லை என நாங்கள் கருதுகின்றோம். ஆனால் சர்வதேச கிரிக்கட் சம்மேனளம் தடைகள், அபராதங்களை விதித்துள்ளது.

நாங்கள் அதற்கு கட்டுப்படுகின்றோம் எனவும் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

(Sri Lankan Cricket Control Board impose private sanctions Chandimal)

 

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites