வடக்கின் முதலமைச்சர் யார்? கூட்டமைப்பிற்குள் தொடரும் குழப்பம்;! விக்கியை களத்தில் இறக்க முயற்சி…

0
265
Northern Provincial Chief Ministerial candidate Confusion TNA

தற்போதைய வடக்கு மாகாண சபையின் ஆயுட்காலம் இன்னும் நான்கு மாதங்களில் முடியவுள்ள நிலையில், அடுத்த மாகாண சபை முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற கேள்வி நிலவி வருகின்றது. (Northern Provincial Chief Ministerial candidate Confusion TNA)

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் வடக்கு மாகாண சபையின் ஆயுள் காலம் முடிந்த பின்னர் உடனடியாக மாகாண சபைத் தேர்தல் நடத்துவதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன.

இந்த நிலையில், வடக்கு மாகாணசபைத் தேர்தலில் பல கட்சிகள் களமிறங்குவதற்கான சூழலில் முதலமைச்சர் பதவிக்காக களமிறங்கப் போகிறவர்கள் யார் என்ற கேள்வி மக்கள் மத்தியில் மாத்திரமன்றி தமிழ்ப் பிரதிநிதிகளிடமும் நீடிக்கிறது.

இதேவேளை, நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்படுகின்றவர் தமிழ் அரசுக் கட்சியைச் சேர்ந்தவராகத்தான் இருப்பார் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுடன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்திருந்தார்.

மாவை சேனாதிராசா, தமிழ் மக்களுடைய விடுதலைப் போராட்ட வரலாற்றில் 50 ஆண்டுகள் அரசியல் பணியாற்றியிருக்கிறார். மக்களோடு இருந்திருக்கின்றார். அவருடைய பயணத்துக்கு ஒரு சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என்றும் சிறிதரன் வலியுறுத்தியுள்ளார்.

இதுஇவ்வாறு இருக்க வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் மீண்டும் முதலமைச்சர் பதவிக்குப் போடடியிடுவாரா என்ற கேள்விக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமக்கு போட்டியிட வாய்ப்பளிக்கும் என்று நம்பவில்லை எனவும், புதியதொரு கட்சி அல்லது கூட்டணியை அமைத்துப் போட்டியிடும் வாய்ப்புகள் இருப்பதாகவும் அவர் அண்மையில் கூறியிருந்தார்.

இந்த நிலையில், வடக்கு மாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக சீ.வி. விக்னேஸ்வரனை மீண்டும் களமிறக்கப் போவதில்லை என்று அண்மையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கூறியிருந்தார்.

அதுபோலவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனும் பொருத்தமான நேரத்தில் பொருத்தமான முதலமைச்சர் வேட்பாளரை அறிவிப்போம் என்று கூறியிருந்தார்.

ஆகவே வடக்கு மாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை வெளிப்படுத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயங்கி வருகின்ற நிலையில், சீ.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக முதலமைச்சர் வேட்பாளராக மாவை சேனாதிராசாவையா, சுமந்திரனையா கூட்டமைப்பு முன்னிறுத்தப் போகிறது என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது.

இதேவேளை, ஈபிடிபியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவும் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாக ஊடகங்கள் சுட்டிக்காட்டியிருந்தன.

எனினும் வடமாகாண சபைக்கான தேர்தலின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தற்போதுள்ள முலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரனையே மீண்டும் களமிறக்குவதற்கு பல முனைகளில் முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விக்னேஸ்வரன் வெளியேறினால் வட மாகாண சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ அல்லது விக்னேஸ்வரனின் அணியோ பொரும்பான்மை பலத்தினை பெறமுடியாத நிலை ஏற்படுவதோடு, தமிழரின் பேரம்பேசும் பலமும் வெகுவாக குறைந்து விடும் நிலை உள்ளது.

இவ்வாறு குறைகின்ற போது உரிமைகளை வென்றெடுத்தல் உள்ளிட்ட அனைத்து விடயங்களும் மோசமான நிலையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அடைந்து விடும் என்பது கருத்தாகவுள்ளது.
இத்தகைய சூழ்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு யாரை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்துவது என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Northern Provincial Chief Ministerial candidate Confusion TNA