மாகாண சபைத் தேர்தலை எந்தவகையில் நடத்தினாலும் நாங்கள் சவாலை எதிர்கொள்வோம்

0
131
Mahinda Rajapaksa said wetake challenge next Provincial Council election

(Mahinda Rajapaksa said wetake challenge next Provincial Council election)

அடுத்துவரும் மாகாண சபைத் தேர்தலை எந்த முறையில் நடத்தினாலும் நாம் சவாலை எதிர்கொண்டு வெற்றியடைவோம் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

மாவத்தகமவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.

மத்திய வங்கியில் இடம்பெற்ற பாரிய நிதி மோசடி தொடர்பாக பலவிதமான தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

தற்போது, த நியுயோர்க் ரைம்ஸ் பத்திரிகை செய்தியொன்றை மேற்கோட்காட்டி என்மீது குற்றம்சுமத்துகின்றனர்.

முன்னர் 18 பில்லியன் ரூபா எனக்கு கிடைத்ததாக கூறினார்கள்.

அந்த பணத்தை எவராவது தேடிப்பிடித்து கொண்டு வந்தால் நான் எனது கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலை செய்து கொள்வேன்.

அது எனக்கு பெரிய விடயமல்ல. சநதைக்கோ, கடைத்தெருவிற்கோ சென்றால் இந்த ஆட்சியாளர்களின் தாய் தந்தைமார்களையும் சேர்த்து மக்கள் நினைவுபடுத்துகின்றனர்.

கடந்த தேர்தலில் நல்ல ஒரு பாடத்தை மக்கள் இந்த நல்லாட்சி அரசாங்கத்திற்கு கற்பிப்பார்கள் என்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.

(Mahinda Rajapaksa said wetake challenge next Provincial Council election)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites