ஒன்றிணைந்த எதிர்கட்சியின் விசேட கூட்டம் நாளை; முக்கிய தீர்மானம் தொடர்பில் ஆராய்வு

0
135
tomorrow Special meeting joint opposition

ஒன்றிணைந்த எதிர்கட்சியில் இணைந்து கொள்வது தொடர்பில் இறுதித் தீர்மானம் தொடர்பான விசேட கூட்டம் நாளை ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரி.பீ.ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். (tomorrow Special meeting joint opposition)

ஒன்றிணைந்த எதிர்கட்சியின் கட்சித் தலைவர்கள் கூட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெறவுள்ளது.

இதில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வதா? இல்லையா? என்பது குறித்து நாளைய கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரி.பீ. ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து கொண்டு ஒன்றிணைந்த எதிர்கட்சியில் செயற்பட முடியாது என்ற கருத்து ஒன்றிணைந்த எதிர்கட்சிக்குள் எழுந்துள்ளதனால், 16 பேர் கொண்ட குழு இவ்வாறான ஒரு தீர்மானம் எடுப்பதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு ஒன்றிணைந்த எதிர்கட்சியின் குழுக்கூட்டத்தில் கலந்துகொள்வதாயின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொறுப்புக்களில் இருந்து நீங்கிக் கொள்ள வேண்டும் என்பது 16 பேர் கொண்ட குழுவுக்கு ஒன்றிணைந்த எதிர்கட்சியினால் முன்வைக்கப்பட்டுள்ள நிபந்தனை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

tags :- tomorrow Special meeting joint opposition

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites