விடுதலை புலிகளின் புதையல் தேடும் பணிகள் கிளிநொச்சியில் மும்முரம்

0
249
tamilnews past two days LTTE looking treasure hunt Kilinochchi

(tamilnews past two days LTTE looking treasure hunt Kilinochchi)

கிளிநொச்சியின் இருவேறு பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களில் தமிழீழ விடுதலை புலிகளின் புதையல் தேடும் பணிகள் இடம்பெற்றன.

கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றின் அனுமதியுடன் பொலிசாரின் கண்காணிப்பில் குறித்த அகழ்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

கிளிநொச்சி கனகாம்பிகைகுளம் பகுதியில் கடந்த 26.06.2018 அன்று அகழ்வு பணி முன்னெடுக்கப்பட்ட நிலையில் கைவிடப்பட்டது.

அந்தப் பகுதியில் உறுதியாக தங்கம் இருப்பதாக தெரிவித்து மீண்டும் நேற்று அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

இரவு 9 மணிவரை அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும் எவ்வித சான்றுகளும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் குறித்த அகழ்வு பணியின்போது ஆமை ஒன்று உயிருடன் மீட்கப்பட்டு அருகில் உள்ள நீரோடையில் விடப்பட்டது.

அகழ்வு மேற்கொள்ளப்பட்ட போது வெளியேற்றப்பட்ட மண்ணை அதிகாலை 4 மணிவரை மீண்டும் மூடியுள்ளனர்.

இதேவேளை, இன்று கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் பகுதியில் தமிழீழ விடுதலை புலிகளின் முகாம் ஒன்று அமைந்திருந்த பகுதியில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

குறித்த அகழ்வு பணியின்போது எந்தவித பொருட்களும் மீட்கப்படாத நிலையில் கைவிடப்பட்டமை குறிப்பிடதக்கதாகும்.

(tamilnews past two days LTTE looking treasure hunt Kilinochchi)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites